ஏன் இந்த 'GOHOMEGOTA'?

ஏன் இந்த 'GOHOMEGOTA'?


22 மில்லியன் மக்களைக் கொண்ட நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவின்றார்கள்.

இவ்வளவு மோசமான ஒரு பொருளாதார சரிவை எந்த ஒரு நாடும் சந்தித்ததில்லை.இலங்கை மிகவும் வேகமான சரிவை கண்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோசமான சரிவு ஏன் எதனால் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம் 

இனவாத அரசியல் 
எந்தவித அரசியல் அனுபவமுமில்லாத கோட்டபாயவை,தமிழ் மக்களை கொன்று குவித்த ஒரு காரனத்திற்காக ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் களமிறக்கி வெற்றி கண்டார் மஹிந்த ராஜபக்ஷ 

ஒற்றுமையாக வாழ்ந்த இலங்கை மக்களிடையே இனவாதத்தை முன் வைத்து மிகப்பெரும் வெற்றியுடன் பதவிக்கு வந்தவர்தான் கோட்டபாய.

இனவாதத்தால் ஏற்பட்ட அழிவுகள் கொஞ்ச நஞ்சமில்லை.நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு  கோட்டபயாவின் இந்த இனவாத அரசியல் கொள்கை மிகவும் முக்கிய காரணமாயிருந்தது.

பெரும்பான்மை இன மக்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்த சிறுபான்மை இனத்தை பிரிப்பதற்காக  பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி இனங்களுக்கிடையே பகைமையை உருவாக்கி அரசியல் செய்தார் கோட்டபாய .

அதன் பிரதிபலனைத்தான் இன்று ஜனாதிபதியும்,நாட்டு மக்களும் அனுபவிக்கின்றார்கள்.

திட்டமிடப்படாத பாரம்பரிய விவசாயம்
இலங்கையில் மிகப்பெரிய அளவுக்கு உணவுப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட கோத்தபய ராஜகபக்ச அறிவிப்புதான் காரணம். இலங்கையில் செயற்கை உரத்தைத் தடை செய்து, இயற்கை விவசாயத்துக்கு 100 சதவீதம் மாற வேண்டும் என்ற அறிவிப்பு மோசமான விளைவைப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியது.

ஜனாதிபதியின் இந்தத் திடீர் அறிவிப்பு முதலில் பாதிப்பு இல்லாமல் இருந்தாலும் நாளுக்கு நாள் பாதிப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது

அதனை சமாளிக்க விலையேற்றங்கள் ஆரம்பித்தது.அதனை சமாளிக்க கடன்கள் பெற்ற நிலையில் பொருளாதார சரிவு ஆரம்பமாகியது.

பொருளாதாரப் பேரழிவை மக்களிடம் மறைக்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை அரசு பொருளாதார அவசர நிலையைப் பிரகடனம் செய்தது. அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ராணுவம் ஈடுபடுத்தப்படுகிறது.

உலகிலேயே இயற்கை வழி, பாரம்பரிய விவசாயத்துக்குத் திரும்பும் நாடு இலங்கை என்று திடீரென அறிவித்து ரசாயன உரங்களுக்கும், பூச்சி மருந்துகளுக்கும் திடீரென தடை விதித்தார் ஜனாதிபதி கோத்தபாய.

பாரம்பரிய விவசாய முறையைப் பற்றி அதிகம் தெரியாத விவசாயிகள், அதற்கு முழுமையாகத் தயாராகாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

கோத்தபாயாவின் இந்த திடீர் அறிவிப்பால் விவசாயிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகினர்.

திடீரென ஒரு மாற்றத்தை ஏற்படுவதற்கு முன் ,அதற்கான மாற்று வழிகள்,அதனால் ஏற்படப்போகும் பாதிப்புக்களைபற்றிய தெளிவு அரசாங்கத்திடம் இல்லை.

ஒரு மாற்றத்தை அமல்படுத்தும் முன் அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்ற திறமையான நிபுணர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.ஒரு தனி மனிதனின் தேவையை மட்டும் கருதிய மாற்றமாக நினைத்து விட்டார் போலும் இலங்கை ஜனாதிபதி.

ஏனென்றால் ஜனாதிபதியின் இஷ்டத்திற்கு மாற்றங்கள் செய்தார்.அதன் பிரதிபலனைத்தான் இன்று இலங்கை மக்கள் அனுபவிக்கின்றார்கள். 

திறமையில்லாத அமைச்சர்கள்.நாட்டின் எதிகாலத்தைப் பற்றிய சாதாரண அறிவுகூட இல்லாத ஆலோசகர்கள் ரவடிகள் போன்ற எதற்கு அருகதையற்றவர்களை அருகில் வைத்துகொண்டு நாட்டையே நாசமாக்கிவிட்ட ஒரு ஜனாதிபதி என்றால் அது ஜனாதிபதி கோட்டபாயா மட்டும்தான் என்பதை வரலாறு சொல்லும்.

இலங்கையில் கடந்த 73 வருடங்களில் கடனை மட்டுமே நம்பிய  ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த ராபாக்ஷ அரசாங்கம் ஒன்றுதான்.

அனுபவமில்லாத அரசியல்,கொலைகார அரசியல் கொள்கை ,இனவாத அரசியல் இவைதான் கோட்டபயாவின் அரசியலாக இருந்தது.

அதன் பிரதிபலன் இன்று இலங்கை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று  மக்கள் புரிந்துகொண்டார்கள்.கோட்டபயாவின் ,கொள்கைகளால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாரிய இழப்புக்களைபற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார்கள்.

அதனால்  இன்று ,கடந்தகால வலிகளை மறந்து 
ஒற்றுமையாக,இலங்கையின் எதிர்கால சந்ததியினரை கடனில் வாழ வழிவகுத்த இந்த அரசாங்கத்தை 'GOHOMEGOTTA'என்று சொல்வதில் என்ன தவறு?  
மாஸ்டர்

Post a Comment

Previous Post Next Post