சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-2

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-2


உழைப்பு தரும் உலக முகவரி

அகிலத்தின் புகழ் அனைத்தும் இறைவனுக்கே.

இந்த உலகில் கோடான கோடிபேர் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, மறைந்துள்ளனர். வாழ்ந்து கொண்டும் உள்ளனர். ஆனால் வாழும் கால கட்டத்தில் இந்த உலகில் தம் முகத்திற்கு ஒரு முகவரியை ஏற்படுத்தியவர்கள் எத்துணைபேர்?.

அதிலும் இந்த சமூகம் நலம் பெற வாழ்ந்தவர்கள்எத்தணைபேர்?.

உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்பார் பட்டினத்தார். அன்று முதல் இன்று வரை உலகில் உயர்ந்த சிறந்த மாமனிதர்கள் பலரும், பல இன்னல்களைக் கடந்து, பல அனுபவங்களைப் பெற்று, பல சோதனைகளைச் சந்தித்த பிறகே தமக்கான ஓர் அங்கீகாரத்தை, ஓர் அடையாளத்தை இந்த உலகில் ஏற்படுத்தியவர்கள்.

அந்தவகையில் ஒருவாழ்வியல் சான்றாக இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழ்மையை வென்று சிகரம் தொட்ட மாமனிதர், அமீரகத்தில் வாழும் தமிழக சுல்தான் ஆக வலம் வரும், இறையச்சம் கொண்ட நல்ல மனம் கொண்ட, ஒரு தங்கத் தமிழ் மகனாம், உழைப்பால் உயர்ந்த முத்துப்பேட்டையின்உலகநாயகன் பற்றிக்காண்போம். 

உழைப்பால்உயர்ந்த முத்துப்பேட்டையின் உலகநாயகன்

திரு முகமது அசனாலி - திருமதி. ஜன்னத் பரீதா தம்பதியருக்கு, தமிழகத்தின் முத்துப்பேட்டையில் மண்ணின் மைந்தராகப் பிறந்தார்... 
எஸ்.எம். ஹைதர்அலி .

உடன் பிறந்தோர் நால்வர். இரண்டு அண்ணன்மார்கள், ஒரு மூத்த சகோதரி,ஓர் இளைய சகோதரி.

உறவுப் பெண்ணை மணமுடித்தவர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் மனதில் வாழ்வின் உச்சம் தொட வேண்டும் என்ற மகத்தான வித்து இளமையிலேயே விதை கொண்டு விட்டது.

தானும் உயர வேண்டும், தன்னைச் சார்ந்தோரையும் உயர்வடையச் செய்ய வேண்டும் என எண்ணியவர், வாழ்வில் விடியலைத் தேடியவர். -திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற ஔவையின் கூற்றுக்கு ஏற்ப பல சிரமங்களைச் சந்தித்த பின் 30 ஆண்டுகளுக்கு முன் ஓட்டுநர் பணிக்காக கத்தார் பயணித்தார்.

மனத்தில் கனன்று கொண்டிருந்த இலட்சிய நெருப்பு, அயராத கடும் உழைப்பு ,

விடா முயற்சி நேர்மை தவறாத பண்பு அவரை வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்கச் செய்தது. 

கத்தாரில் இருந்து குவைத் பயணம் கட்டுச்சிப்பம் ( Paral ) கொண்டு செல்லும் பணி. சிறு அளவில் தொடங்கி அதுவளர, வளர, ட்ராவல்ஸ்  பணியும் தொடங்கியது. காலம் அவரது நேர்மைக்கும், உழைப்புக்கும் முயற்சிக்கும் விடை கூறியது. 

ஆம்...!

இன்று குவைத், கத்தார், பஹ்ரைன், இந்தியா, துபாய், ஸ்ரீ லங்கா, மலேசியா, நேபால், கனடா என கண்டம் விட்டு கண்டம் தன் தொழிலை விரிவுபடுத்தி உலக நாயகனாக வலம் வருகிறார். 

அசாத்தியமான சாதனையாளராக தன்னை உலகிற்கு அடையாளப்படுத்திய இவர் தம் இளமைக் காலம் கல்வியில் 9-ஆம் வகுப்புக்குமேல் செல்லவிடவில்லை.

ஆனால், இன்று சமுதாயம் இவரது ஈகைமனம், கடும் உழைப்பு, திறமை கண்டு பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. 

உண்மைதான்... அமெரிக்கப் பல்கலைக்கழகம் இவருக்குடாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

இங்கிலாந்து நாடு தன் பாராளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. 

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சென்னையில் 14.11.2021 - அன்றும் இவருக்குத் தங்கத்தமிழ் மகன் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. 

இவரது சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவரை நாமும் வாழ்த்துவோம்.

எண்ணங்கள் எத்துணை உறுதியாயினும் வாழ்வில் உயரம் தொடுவது என்பது எத்துணை சிரமம் எனப்பலரும் நினைக்கும் நிலையில் வாழும் காலத்தில் தன் முகத்திற்கு ஒரு முகவரியைஉலக அரங்கில் ஏற்படுத்திய ஒரு மாமனிதர். 

தமிழகத்தின் முத்துப்பேட்பையின் ஒரு மீனவக் குடும்பத்தில் பிறந்து, உயர்ந்த சிந்தனையால், உயரிய லட்சியத்தால், பல இன்னல்களைக் கடந்து, விடா முயற்சியுடன், கடும் உழைப்பை நல்கி, நேர்மையைத்தவறவிடாது. இறைநம்பிக்கையின் துணைகொண்டு இன்று உலக அரங்கில் ஒரு மிகப்பெரும் தொழிலதிபராக தம்மை உயர்த்திக் கொண்டு, தன்னைப் போலவே தன்னைச் சார்ந்தோரும் உயர வேண்டும் என்னும் இலட்சிய நோக்கம் கொண்டவராக வாழ்ந்து வருகிறார்.

அத்துடன் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கும் கலியுகக் கொடை வள்ளல் TVSHyber Groups of Company- இன் chairman Dr.S.M. ஹைதர் அலி அவர்களின் வாழ்க்கையானது, இன்று பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. 

உழைத்தால் எல்லோரும் உயரலாம் என்பதற்கு இவர் ஒரு வாழ்வியல் சான்றாக விளங்குகிறார். 

பலரும் பயனுற வேண்டும் எனும் அவரது சிந்தனை போற்றுதலுக்குரியது.

நாமும் இவரைப்போல் வாழ முயற்சிப்போம்... உண்மை , நேர்மை , உழைப்பால் இந்த உலகில் நம் முகத்திற்கு ஒரு முகவரி ஏற்படுத்துவோம்.

இன்னாரை போல் வாழ வேண்டும் என்று நாம் நினைப்பதை விட நம்மை போல் வாழ வேண்டும்.என்று பிறர் எண்ணும் அளவிந்த நாம் வாழ்ந்து காட்டுவதே சிறப்பு!(தொடரும்)



Post a Comment

Previous Post Next Post