மாய யுத்தம்!

மாய யுத்தம்!


இடது கரத்தில் குண்டு
ஏந்தியவனையும்.
வலது கரத்தில் பல 
ரத துப்பாக்கி 
இயக்கியவனையும். 
போர் இட்டு 
வென்றவனையும்.
களத்தில் எதிர்த்து 
நின்றவனையும்.

போர் விமானம் 
ஓட்டியவனையும்.
ஏவு கணை 
இறக்கியவனையும்.
செல்லடிப்பதில் 
வல்லமை பெற்றவனையும்.
பீரங்கி பூட்டிய 
வீராங்கனையையும்.

அப்பு தொடுக்கும் 
வித்தகனையும்.
மல்யுத்தம் புரிகின்ற 
மகா வீரனையும்.
கம்பு சுழட்டும் 
அதிபதிகளையும்.
காளை அடக்கிடும் 
வீராதி சூராதிகளையும்.

அதிநுட்ப ஆயுதங்களைக் 
கண்டு பிடித்தவர்களையும்.
அணுகுண்டை 
உருவாக்கியவனையும் .
அணு ஆராய்ச்சியில் 
கை தேர்ந்தவர்களையும்.
மார்பு தட்டி வீர வசனம் 
உரைத்திடுவோரையும்.

மேடை போட்டு பெரும் 
புரட்சியை வளர்ப்போரையும்.
அடக்கிப் போட்டது 
கோவிட்19 யுத்தம்.
கொரோனா என்னும் 
மாயை ஆயுதம்.
தனக்கு அடிமையாக்கியது 
அத்தனை வீரத்தையும்.

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post