முற்றும் உணர்ந்தவன்!

முற்றும் உணர்ந்தவன்!


இவைகளைத் திறக்கிறேன்
அந்நிய கண்களெல்லாம்
என்னையே
பார்ப்பதைப் போன்ற உணர்வு
கைகளால் விழிகளை 
மூடுகிறேன்

செவிகளைத் திறக்கிறேன்
அந்நிய செவிகளெல்லாம்
என்னையே
கேட்பதைப் போன்ற உணர்வு
கைகளால் செவிகளை
மூடுகிறேன்

வாயைத் திறக்கிறேன்
அந்நிய நாவுகளெல்லாம்
என்னையே 
பேசுவதைப் போன்ற உணர்வு
கைகளால் வாயை
மூடுகிறேன்

ஆடை உடுத்தியும்
அந்நியருக்காய்
அடிக்கடி என்னை 
ஒளித்து வைக்கிறேன்
என்னை நான்
முற்றும் உணர்ந்தவன் என்பதனால்...

அந்நியரைப் பொருட்படுத்தாமல்
அலைகிறான்
முற்றும் துறந்தவனாய்
மனம் பிறழ்ந்தவன்
தன்னை முழுவதும்
மறந்தவன் என்பதனால் தானோ?

Vettai Email-vettai007@yahoo.com

1 Comments

  1. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
    எனது கவிதையும் இந்த இதழில் இடம் பெற்றிருப்பது மகிழ்வைத் தருகிறது.
    இனிமையாக வளர்ந்து வரும் இதழில் எனக்கும் வழங்கி வரும் வாய்ப்புகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    பிரியமுடன்...
    ஐ.தர்மசிங்
    நாகர்கோவில்...

    ReplyDelete
Previous Post Next Post