அவளதில்காரம்!

அவளதில்காரம்!


ஒரு கவிதை என்ன செய்துவிடும்
கட்டிலை ஆக்கிரமிப்பு செய்து
கையில் பேனாவை பிடித்து 
பண்டல் பேப்பரில் பாதியை 
கிறுக்கி எழுதி் எழுதி எறிந்த 
அவளுக்கு போட்டியிட
நான் இருந்தேன்
காதலைச் சொல்ல 
வார்த்தை இல்லை

அட்டானிக்காலில் ஒட்டுமொத்த 
பைந்தமிழையும் புரட்டிப்போட்ட 
அவளுக்கு பிழைகளை 
திருத்த நான் 
தேவைப்படுகிறேன்

புடைத்த மூக்கும்
காதோரம் லோலாக்கும்
காற்றாடி அலங்கரித்த அவள் 
பறவை இன குழல் என
கவிதையை மாறி மாறி வாசித்தன
அதில் புலப்படவில்லை நான்

மாலை நேரம்
அலசிய கூந்தலுக்கு 
விரலால் பதில் கூறி
பார்வையில் கவிதை 
வாசிக்கிறாள் என்னிடம்
பிழைகளை நான் 
எப்படி சிக்கெடுக்க

சிறு இருக்கை மீதேறி 
லாவகமாக உட்காந்த அவளிடம்
ஆடையில் அடக்கத்தை 
நான் அப்போது மட்டும் 
மறந்தே போகிறேன்
வானவில் வண்ணத்தை 
அவளிடம் தேடுகிறேன்
புதுக்கவிதைக்காக

புனைந்து புனைந்து
பினைந்து விட்டன 
மனமும் இரு கரமும்
இதழ்கள் மட்டும் நல்லநேரம் 
பார்த்து இணைகின்றன
சிறு குருங்கவிதை தனை
வடித்தது போல்

வெண்பாக்கள் 
இணைப்பாக்களானப் பிறகு
இடைவெளி இல்லாமல் 
பிழைகள் கலக்கப்பட்டன
அவள் கொடுத்த இதழ் 
காரம் தனில்

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post