Ticker

6/recent/ticker-posts

இரண்டில் ஒன்று!


ஒருவர்...

என்னை ஏமாற்றிய நபரை
நல்லவரென்று 
சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எனக்குத் தெரியாத நபரை
சரியில்லையென்று
சொல்லிக்கொண்டிருக்கிறார்.

எனக்குத் தெரியாதவரை
தெரியவரும் காலத்தில்
நல்லவரென்றும்
சரியில்லையென்றும்
நான் சொல்வதைப்போல்,

எனக்குத் தெரிந்த நல்லவரை
அவருக்குத் 
தெரியவரும் காலத்தில்
நல்லவரென்றும்
சரியில்லையென்றும்
இரண்டில் ஒன்றைத்தான்
அவரும்
சொல்லப்போகிறார்.

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

0 Comments