Ticker

6/recent/ticker-posts

உயிர் வாழும் சொர்க்கம்!


உயிர்வாழும் சொர்க்கம் நீ
உன் பாதத்தின் கீழ் 
நான் தேடுவேன் சொர்க்கம் இனி

சொல்லுக்கு இனியவள் நீ
நிலாச்சோறூட்டும் தூயவள் நீ

அன்பின் அரிச்சுவடி நீ
பண்பைப் புகட்டும் 
பெருங்காவியம் நீ

உயிர் கொடுக்கும் உத்தமி நீ
ஒவ்வொருவரும் வாழ்த்துகின்ற
சத்தியம் நீ

பெற்ற செல்வங்களுக்காய் 
உருகிடுவாய் நீ
உனை உருக்கி ஒளி 
தந்து வளர்த்திடுவாய் நீ

ஈரைந்து திங்கள் 
கருவறையில் சுமந்(தாய்)
உதிரத்தை ஊனாக்கி
உண்மையாய் ஈந்(தாய்)

என் முதல் அழுகையில் சிரித்(தாய்)
என் புன்னகை பார்த்தே பூரித்(தாய்)

எத்தனை வயது கடந்தாலும் 
தாய் மடியே தனி சுகம்
தரணி தாண்டி மணக்குமே 
அவள் புகழ்

தாய்மையே
தூய்மை ...
தாய்மையே
புனிதம்...


வேட்டை E-mail; vettai007@yahoo.com

Post a Comment

0 Comments