கோவையில் முப்பெரும் விழா.

கோவையில் முப்பெரும் விழா.


கோவை வசந்த வாசல் கவிமன்றத் திங்கள் அமர்வுக் கவியரங்கம்,
நூல் வெளியீடு, மற்றும் விருதுகள் வழங்கல்ஆகிய  முப்பெரும் விழா

கோவை,பந்தயச்சாலை, உற்பத்தித் திறன் குழு வளாக அரங்கத்தில் 08-05-2022 ஞாயிற்றுக் கிழமை அன்று வசந்த வாசல் கவிமன்றத்தின் சார்பாக ,திங்கள் அமர்வுக் கவியரங்கம்,சென்னை இலக்கியச் சோலை பதிப்பகத்தாரின் 12 ஆம் ஆண்டுக்கான இலக்கியச்சோலை ஆண்டுவிழா மலர் வெளியீடு,மற்றும் தமிழ்ச் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு மன்றத் தலைவர் கவிஞர் நம்பிக்கை நாகராஜன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார்.

முன்னதாக கவிஞர் கோவை அன்பு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.
 
இலக்கியச் சோலை மாத இதழின் 12 ஆண்டு விழா மலர் "கோவைச் சிறப்பிதழாக" வெளியிடப்பட்டது.
மலரை தமிழக அரசின் திருவள்ளுவர் விருதாளர், தமிழ்ச் செம்மல், குறள்யோகி,திருக்குறள் தூதர், முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்கள் வெளியிட,முதல் படிகளைக் கணக்காயர் ஆர்.வி.பெருமாள் அவர்களுடன் PSR ஆடையை நிர்வாக இயக்குநர் திரு ஜவகர் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.

இலக்கியச் சோலையின் பதிப்பாசிரியர் கவிஞர் சோலை தமிழினியன், திரு சோம பாலகுரு, கவிஞர் கனல் மணி, கவிஞர் ஆர் வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். 

விழாவில் தமிழ்ச் சான்றோர்கள்
வழக்கறிஞர் இரா.சண்முகம் அவர்களுக்கு திருக்குறள் தூதர் முனைவர் மு.க.அன்வர் பாட்சா அவர்களும்,வழக்கறிஞர் ம.நா.சிவஞானம் அவர்களுக்கு முனைவர் இரா.சுகுமார் அவர்களும்,கவிதாயினி திருமதி பூர்ணிமா சங்கர் அவர்களுக்கு தமிழ்த்திரு க. தேவதாசு அவர்களும், கவிதாயினி திருமதி சண்முகதேவி அவர்களுக்கு கலைமாமணி மு.பெ.இராமலிங்கம் அவர்களும் "தமிழ்த் தோன்றல்" விருதுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

வழக்கறிஞர்கள் இரா.சண்முகம், ம.நா.சிவஞானம் ஆகியோர் ஏற்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து கவிஞர்களின் கவி உலா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி மாணவ,மாணாக்கியர் பலரும் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

மன்றச் செயலாளர் புதினச் செல்வர் கவிஞர் முகில் தினகரன் நிகழ்ச்சியை நெறிப் படுத்தினார்.

நிறைவாக கவிதாயினி திருமதி மைதிலி யோகராஜ் நன்றி நவில விழா சிறப்பாக நிறைவடைந்தது.
 
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post