Ticker

6/recent/ticker-posts

இலங்கைப் பொருளாதாரம் "மரணச் சுழலில்" சிக்கியுள்ளது-உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் எச். ஹான்கே


இலங்கைப் பொருளாதாரம் "மரணச் சுழலில்" உள்ளது என்று பால்டிமோர் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் எச். ஹான்கே கூறுகிறார்.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தாதது இதுவே முதல் முறை என அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 50% வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹான்கே சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை இந்த மரணச் சுழலில் இருந்து காப்பாற்ற மத்திய வங்கியை இரத்துச் செய்து நாணயச் சபை நிறுவப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.



Post a Comment

0 Comments