ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை

ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை


உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான தகவல்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது.

இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரஷிய அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு மாதங்களுக்கு முன்பு முயற்சி நடந்தது.

கருங்கடல் மற்றும் காஸ்பியன் கடலுக்கும் இடையேயான காகசஸ் பகுதியில் புதினை கொலை செய்ய முயற்சி நடந்தது. காகசஸ் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் இருந்து புதின் தப்பிவிட்டார் இது உண்மையில் நடந்தது. புதினை கொல்ல நடந்த முயற்சி பற்றி தகவல் வெளியாகவில்லை என்று தெரிவித்தார்.

இதுபற்றி ரஷியா விளக்கம் எதுவும் தரவில்லை.

வல்லரசு நாடான ரஷயாவின் அதிபர் புதினுக்கு எப்போதும் பலத்த பாதுகாப்பு இருக்கும். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் சுற்றி நின்றப்படி இருப்பார்கள். இதனை மீறி அவரை கொல்ல சதி நடந்ததா என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது


Post a Comment

Previous Post Next Post