ஹிஜாமா சிகிச்சையால் குணம் பெறலாமா?

ஹிஜாமா சிகிச்சையால் குணம் பெறலாமா?


ஹிஜாமா சிகிச்சை பற்றிய உங்களது நேர்காணலின் இறுதிப் பாகத்தை அண்மையில் தொலைக்காட்சியில் பார்த்தேன். இது ரசூல் (ஸல்) அவர்கள் பின்பற்றிய ஒரு சிகிச்சை முறை எனவும் இதன் மூலம் பல நோய்களுக்குச் சுகம் கிடைக்கிறது எனவும் குறிப்பிட்டீர்கள். இதன் மூலம் தொடர்ச்சியாக இருக்கும் கழுத்து மற்றும் முதுகுவலிக்கு நிவாரணம் உண்டா என அறியத்தரவும்.

பி.ஏ.சாஜஹான், குருநாகல்

பதில் : ஹிஜாமா என்பது ரசூல் (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த ஒரு நோய்த்தடுப்பு மற்றும் நோய்ச்சிகிச்சை முறையாகும். ஆனால் ஒரு கவலைக்கிடமான விடயம் என்ன வென்றால் இச் சிகிச்சை முறை என்ன என்பதைப் பற்றிக் கூட முஸ்லிம்களில் அனேகருக்குத் தெரியாது.

ஹிஜாமா என்பது ஒரு அரபிச் சொல்லாகும். இதை ஆங்கிலத்தில் Cupping Therapy எனவும், தமிழில் உடம்பில் சிறிய கூரிய பிளேட்டினால் நோவு ஏற்படாதவாறு சிறிய கீறுகளைப்போட்டு இரத்தம் வெளியேற்றும் முறை எனவும் அழைக்கப்படுகிறது. இச்சிகிச்சை முறை ரசூல் (ஸல்) அவர்களினால் கடைப்பிடித்து வரப்பட்ட ஒரு விடயமாக இருந்தாலும் கூட பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்து, சீனா உட்பட பல நாடுகளில் பின் பற்றப்பட்ட ஒரு பாரம்பரியச் சிகிச்சை முறையாகும்.

ஆனாலும் ரசூல் (ஸல்) அவர்களினால் பின்பற்றப்பட்ட ஹிஜாமா சிகிச்சை முறை சற்று வித்தியாசமானது. ரசூல் (ஸல்) அவர்கள் இச்சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கு ஒரு சில நாட்களைத் தடை செய்தும் மற்றும் சில நாட்களில் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தியும் உள்ளார். விஷேடமாக புதன் கிழமைகளில் ஹிஜாமா சிகிச்சையளிப்பதை முற்றாகத் தவிர்த்துள்ளார்கள். அத்துடன் பிறை 17, 19, 21 ஆகிய ஏதாவது ஒரு நாளில் ஹிஜாமாச் சிகிச்சை மேற்கொள் வதை வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

ரசூல் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றிருந்த போது கூட மலக்குமார்கள் உங்கள் உம்மத்துக்கள் மத்தியில் ஹிஜாமா சிகிச்சையை ஊக்குவிக்கும் படி கூறியிருப்பதாக இருந்தால் இதன் முக்கியத்துவத்தைப் பற்றி மேலதிகமாகக் கூற வேண்டியதில்லை என நினைக்கின்றேன்.

ஹிஜாமாச் சிகிச்சை முறை முஸ் லிம்கள் மத்தியில் அருகி வந்தாலும் கூட இன்று ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் பல்கலைக்கழகங்க ளிலும் கல்வி நிறுவனங்களிலும் மாற் றுமுறைச் சிகிச்சை கற்கை நெறியை (Alternative Medicine) மேற்கொள்ளும் மாணவர்களுக்கு Cupping Theraphy ஒரு பாடமாக உள்ளது என்பதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

இது மாத்திரமின்றி மாற்று மத வைத்தியர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூட ஹிஜாமாச் சிகிச்சையின் போது வெளிவரும் இரத்தத்தைப் பரிசோதனை செய்து பல அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேற்றப்படும் குருதியில் பல நச்சுப் பொருட்களும் உடம்புக்குத் தேவையற்ற பதார்த்தங்களும் அடங்கியிருப்பதனால் இதை ஒரு நச்சு நீக்கிச் சிகிச்சை முறையாகக் கருதுகிறார்கள். அத்துடன் ஹிஜாமா சிகிச்சையின் போது உடம்பின் தொழிற்பாடுகளில் ஏற்படு கின்ற மாற்றங்களை விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். 

நான் ஹிஜாமாச் சிகிச்சை முறையில் மேலதிக பயிற்சி பெறுவதற்காக பிரித்தானிய இராஜ்ஜியத்திற்குச் சென்றிருந்த போது முஸ்லிம் அல்லாதவர்கள் கூட ஹிஜாமாச் சிகிச்சைக்காக வந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இச்சிகிச்சை முறை பல நோய்களுக்கு நிவாரணியாக உள்ளது. முதுகுவலி, கழுத்துவலி, ஒற்றைத் தலைவலி உட்பட பல காரணங்களினால் ஏற்படும் தலைவலி, பாரிசவாதம், ரூமடொய்ட் ஆத்ரைடிஸ், கைகால் விறைப்பு, பெண்களுக்கான சில நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றிற்கு ஹிஜாமாச் சிகிச்சை முறையைத் தனியாகவோ அல்லது யுனானி மருந்துகளுடன் சேர்த்தோ கொடுத்தால் சிறந்த பலன் கிடைக்கின்றது. அத்துடன் மேற்குறிப்பிட்டது போல் பல நோய்கள் வருவதையும், தடுக்கின்றது.

ஹிஜாமாச் சிகிச்சைக்கான அடிப்படைத் தகுதி ஒரு வைத்தியராக இருக்க வேண்டும் என்பதே. காரணம் இது ஒரு சிறியளவிலான சத்திர சிகிச்சையைப் போன்றது. எனவே உடற்கட்டமைப்பையும் உடற்தொழிற்பாடுகளைப் பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் பல நோய் நிலைகளிலும் பல நவீன மருந்துகள் பாவிப்பவர்களிலும் ஹஜாமாச் சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது. ஆனால் இலங்கையில் எதுவித மான மருந்து அறிவும் இல்லாதவர்கள் கூட ஹிஜாமா சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இதன் விளைவாக ஹிஜாமா சிகிச்சையை மேற்கொண்ட ஒரு சிலருக்கு பல பக்கவிளைவுகளும் எற்பற்டுள்ளன. நான்  ஹிஜாமா சம்பந்தப்பட்ட கருத்தரங்கொன்றி இந்தியா சென்றிருந்த போது வைத்தியர் அல்லாதோரிடம் ஹிஜாமா சிகிச்சை பெற்று பலபக்கவிளைவுகள் ஏற்பட்ட  சில மரணங்கள் கூட ஏற்பட்டதையும் வைத்தியர் ஒருவர் ஆதாாரமாக எடுத்துக் காட்டினார்.

.எனவே இச்சிகிச்சையை மேற்கொள்ள  வேண்டுமானால் ஹிஜாமா சிகிச்சையில் பயிற்சி பெற்ற வைத்தியர் ஒருவரை நாடி மேற்கொள்வதே சிறந்தது.

ஹிஜாமா சிகிச்சையை சரியான முறையில் மேற்கொள்ளும் போது வலி ஏற்படாது அல்லது மிகச் சிறிதளவான வலியை உணர்வதோடு, பக்கவிளைவு களும் ஏற்படமாட்டாது. 

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனக்கு முதுகுவலி பல வருடங்களாக இருப்பதாகவும் இதற்கு ஹிஜாமாச் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா எனவும் வினவியுள்ளார். முதுகுவலி பல காரணங்களினால் ஏற்படுகின்றது. அனேகமான காரணங்களினால் ஏற்படுகின்ற முதுகு வலிக்கு ஹிஜாமா சிகிச்சை மாத்திரம் போதுமானது. ஒரு சிலர் ஹிஜாமா சிகிச்சையுடன் யுனானி மருத்துவச் சிகிச்சையும் மேற்கொண்டு பலன் பெற்றுள்ளார்கள். 

அத்துடன் பெண்களுக்கு ஹிஜாமா சிகிச்சையை மேற்கொள்வதாயின் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட பெண் வைத்தியர்களைக் கொண்டே மேற்கொள்கிறோம். இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது நபிவழிச் சிகிச்சை முறையான ஹிஜாமாவைப் பிரபல்யப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதோடு, இச்சிகிச்சை முறையின் பயன்களை விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இஸ்லாமிய இயக்கங்களை ஊக்குவிக்கும் படியும் வேண்டுகிறேன்.


Post a Comment

Previous Post Next Post