மக்கள் போராட்டத்தை இனவாதமாக மாற்றத்துடிக்கும் அரசாங்கம்

மக்கள் போராட்டத்தை இனவாதமாக மாற்றத்துடிக்கும் அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்வரை இனவாதம் அழியாது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான இச்சூழ்நிலையில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகின்றது.

இந்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றது.

ஏனென்றால் நாட்டு மக்கள் ஒற்றுமையாகி விட்டால் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து நிச்சயம்.

ஆகவே எப்படியாவது இந்த போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

ஊடகத்துறை அமைச்சரவை பேச்சாளர் நாலக கோடஹேவா என்ன சொல்லுகின்றார் என்று பாருங்கள் .  

"இலங்கையில் இனவாதத்தை தூண்டும் விடயங்களில் தமிழ் புலம்பெயர் அமைப்புகள் செயற்படுவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நாலக கொடஹேவா குற்றம் சாட்டியுள்ளார்.

காலி முகத்திடல் போராட்டக் களத்தில் காட்சிப் படுத்தப்படும் சில இனவாத பதாகைகள் குறித்து வினவியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,

“கடந்த காலங்களில் யுத்தம் நிறைவுக்கு கொண்டு வந்த பின்னர், நாட்டின் அனைத்து இன மக்களையும் இணைத்துக்கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய ஆரம்பித்தோம். யுத்தத்தின் பின்னரும் சில நேரங்களில் இலங்கையிலிருந்து வெளியேறிய சில குழுக்கள், சர்வதேசத்தையும் இணைத்துக்கொண்டு இனவாதத்தை மீண்டும் தோற்றுவிக்க முயற்சிக்கும் போது, நாம் ஜெனீவாவுக்கு சென்று அதற்கு எதிராக குரல் கொடுத்தோம்“ என்று குறிப்பிட்டார்.

“காலி முகத்திடல் போராட்ட களத்திலிருந்து வெளிவரும் சில கருத்துகளிடையே சிலர் இதனை தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றமையை நாம் அவதானிக்கின்றோம்.

உதாரணமாக அங்குள்ள அமரர் பண்டாரநாயக்கவின் சிலையின் கண்களை அங்கிருக்கும் சில இளைஞர்கள் கட்டுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், பிரித்தானியாவின் தமிழ் கார்டியன் என்ற இணையத்தில் பண்டாரநாயக்கவின் சிலையை உடைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, தற்போது பண்டாரநாயக்க சிலையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன“ என்றார்.

“எனவே இந்த இரண்டு சம்பவங்களுக்குமிடையில் தொடர்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். எனவே புத்திசாலியான மக்களிடம் இந்த விடயங்கள் குறித்து தெளிவாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்“ என்று கூறினார்.

தற்போதைய அரசாங்கத்தை இனியும் நம்பும் நிலையில் மக்கள் இல்லை.ராஜபக்ஷ் அரசாங்கத்தால் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மக்கள் மறக்கவில்லை என்பதை பொட்டுக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சரின் பேச்சாளர் கூறியிருப்பது ஏதோ ஒரு நோக்கத்தில் என்பதுமட்டும் புரிகின்றது.சில சந்தர்ப்பங்களில் பொட்டுவின் இப்படிப்பட்ட பேச்சால் மக்களிடையே இனவாதத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்புள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் மிகவும் தெளிவாக இந்த போராட்டத்தை முடிவு கிடைக்கும்வரை எடுத்துச் செல்ல வேண்டும்.இதில் ஜாதி மதங்கள் பார்க்கக் கூடாது.கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்து ஒற்றுமையாக போராட வேண்டும்.

மேலும் ஊடகத்துறை அமைச்சர் குறிப்பிடும்போது
"அரசாங்கம், குறித்த போராட்டக்காரர்களுக்கு ஜனநாயக ரீதியான வாய்ப்பை வழங்கியுள்ளது. எனவே அதில் கலந்துகொள்ளும் மக்களும் புத்திசாதுரியத்துடன் செயற்படுமாறும்" வேண்டுகோள் விடுத்தார். 

ஜனநாயகத்தை அழித்து ஒழித்த ராஜபக்ஷக்கள் இன்று ஜனநாயகத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கின்றது.

இந்த போராட்டமே ஜனநாயகத்தை மீற்பதற்காகத்தான் என்பதை ராஜபக்ஷ அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். 
மாஸ்டர்
Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post