புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -107

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -107


 
“அமேசான்” அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அலைப்புக்களுள் அந்த அனாமேதய அழைப்பிபு இர்வினுக்குக் குள்ளர்கள் பற்றிய தகவல் ஒன்றை அறியத் தந்தது.

அட்டைப்படச் செய்திப்பாடமாகப் பிரசுரிக்கப்பட்டிருந்த நபர்கள் எங்கோ ஓரிடத்திலுள்ள நுண்ணுயிர் ஆய்வு மையத்தில்  பயிற்சிபெறுவோர்களாக இருப்பதாகத் தகவல் தந்த  அந்தத் தொலைபேசி அழைப்பு, மேலதிக தகவல்களைப் பின்னர் தருவதாகக் குறிப்பிட்டுவிட்டு  அழைப்பைத் துண்டித்து விட்டது.

அது அழைப்பு  எந்த நாட்டிலிருந்து வந்தது என்ற தகவலை இர்வினால் அறிந்து கொள்ள முடியாதிருந்தது!

அலுவலகம் முடிவுற்றதும் தன் வீடு சென்ற இர்வின், நன்றாகத்  தூங்கி எழுந்து, விடிந்ததும் விடியாததுமாக செரோக்கியிடமிருந்து எடுத்துவந்த புகைப்படத்தின் அசல் பிரதியுடன் மரவேரடிக்கு வந்து சேர்ந்தான்.

அங்கு தனது சக்தியூர்த்தியை  பாதுகாப்பான இடமொன்றில் நிறுத்தி வைத்துவிட்டு, மரவேரிடுக்கில் சொருகி வைக்கப்பட்டிருந்த தனது வனவாசிகள் உடைகளை மாற்றிக்கொண்டவனாக  புரோகோனிஷ் பகுதியை நோக்கி நடக்கலானான்!

நீண்ட நாட்களுக்குப் பிறகு செரோக்கியும் அவனது தந்தையும் வனத்துக்குச் செல்லும் நிலையில் தம்மைத் தயார் படுத்திக்கொண்டிருந்தனர்.

தனது தாய் தந்த மூலிகைக் கஞ்சை தந்தையும் மகனும் அருந்திவிட்டு, தோல்பைகளை மாட்டிக்கொண்டிருந்தபோது,  திடுதிப்பென இர்வின் அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது!

இன்முகம் மலர்ந்து செரோக்கியும் பெற்றோரும்  அவனை வரவேற்றனர்! செரோக்கியின் தாய் இன்னொரு மூலிகைக் காஞ்சிச் சிரட்டையைக் கொண்டுவந்து இர்வினுக்குக்கொடுத்தாள்! இர்வினும் அதனை வங்கி ‘மடக் மடக்’ எனக் குடித்துவிட்டு சிரட்டையை நிலத்தில் வைத்தான்!

தாம்  நீண்ட நாட்களுக்குப் பின்னர் வனத்துக்குச்  செல்லப் போகும் செய்தியை செரோக்கி  கூறியபோது, அவர்கள் எங்கிருந்து எவ்வாறான எச்சங்களையும், மூலிகைகளையும் திரட்டுகின்றார்கள் என்பதை நேரடியாகப்  பார்ப்பதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்த இர்வின்,  தானும் அவர்களோடு இணைந்து கொள்வதாகக் குறிப்பிட்டபோது அவர்கள் மறுக்கவில்லை!

தம்மிடமிருந்த புகைப்பட அசல் பிரதியை ரெங்க்மாவிடம் ஒப்படைத்தான் இர்வின்.

மூவரையும் வழியனுப்பி வைத்துவிட்டு, வனப்பகுதி நோக்கி நடந்து கொண்டிருக்கும்  அவர்களை செரோக்கியின் தாயும், ரெங்க்மாவும் தம் கண்களிலிருந்தும்  மறையும் வரையும்  பார்த்துக்கொண்டிருந்தனர்!
(தொடரும்)

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post