Ticker

6/recent/ticker-posts

விருப்பங்களின் பொருட்டு!


என்னிடமிருப்பதில்
நல்லவற்றையும்
தரமானவற்றையும் விரும்பி 
எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் எடுத்துக்கொடுத்ததை
நிராகரித்து விட்டு
என் தேர்வில்
நம்பிக்கையற்றவர்களாக
அவர்கள்
விருப்பத்திற்கு இணங்க
எடுத்துக்கொள்கிறார்கள்.

அவர்கள் 
நல்லவைகள் என விரும்பி
எடுத்தவைகளைக்குறித்து
எதுவும் 
என்னால் கூறலாகாது.

என்னிடத்தில்
மீதமிருப்பதெல்லாம்
அவர்களால்
நிராகரிக்கப்பட்டவைகளே! 
அவை அனைத்தும்
நல்லவை மற்றும் தரமானவை.


Post a Comment

0 Comments