திருமண நாள்!

திருமண நாள்!


இரவு முழுதும் இன்ப நிலவுகளுக்கு 
பரிட்சை வைத்து காமன் மட்டும் 
நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று
முதல் நிலவையே பரிசிலாக 
பெற்று விடுகிறான் காதலில் விழுந்தவன்.....

நதிகளை சல்லடையிட்டு 
மின்சாரம் அள்ளி தின்று..
சிறு சிறு கற்களாகி
முறுவல் முகத்தில்
நதியில் நனைந்த காதல் தீயில்
பற்றி எரிந்த தங்க மெழுகாய்
பற்றி எரித்த தங்க சிலையாய்
வார்ப்புகளுக்கு புன்னகைத்து
இடம்பெயர்கிறாள் இன்ப மாயனி.....

என்றும் போல் இன்றல்ல
இருபத்தி நான்கு மணி நேரங்கள்
ஒவ்வொரு மணி நேரமும் 
இன்பங்களின் நதியலைகள்
நித்தம் நீந்தி களிப்புற்று 
கானகம் தேடி அலைந்தவனுக்கு
காம அடவி இசை மீட்டி
அசைந்தாடுகிறது காதலில்......

காய்ச்சல் தொற்றிக் கொள்ள
கானகம் பாடலில் துள்ள
இழைப்பாற இரண்டு 
நிமிடம் போதுமானது
ஆதலால்
மீண்டும் தொடர்கிறது
திருமண நாளின் லீலைகள்
காதலில் சுவாச வீணைகள்......

நடுநிசிகள் கூசி கண்கள் மூடிட
காதலில் திளைக்க தொடங்கி விட்டன
இந்த திருமண நாள் பறவைகள்
இன்னுமொரு நாளை
இன்றிலிருந்து தொடங்கிட....

வசப்பட்ட வாழ்வை 
வான் முழுதும் பரப்பி
கடந்து செல்கின்றன
நட்சத்திரங்கள் குழலில் 
செருக மாலை மாற்றி 
தொடர்கின்றன நாளாம்
திருமண நாளாம்.......


Post a Comment

Previous Post Next Post