திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-36

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-36


குறள் 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மாப்ள.. இந்த ஒலகத்துல வாழ்ற காலத்துல அறநெறிப்படி வாழணும். அப்படி இருக்கவொ மேல் ஒலகத்துல கடவுளுக்கு சமமா மதிக்கப் படுவாவொ மாப்ள. 

குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.

மாப்ள ... நெறைய பணம் வச்சு இருக்க ஒருத்தனுக்கு, விருந்தாளுங்களை வரவேற்று நல்லபடி நடத்தலைன்னா,அவன் கையில காசு இருந்தாலும் ஏழை மாதிரி தான். இப்படிப்பட்ட மோசமானவனுவொ இந்த ஒலகத்துல நெறைய வேரு இருக்கானுவொ மாப்ள. 

குறள் 187
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாடல் தேற்றா தவர்.

மாப்ள.. மத்தவொ கிட்ட இனிமையா பேசி அவொளோட நட்பா இருக்கணும். இப்படி இருக்கத்  தெரியாதவொ மத்தவொளப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லி, நட்புக்கு வேட்டு வச்சுருவாவொ மாப்ள.. 

குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும்பயன் இல்லாத சொல்.

பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் அவொ சொல்லக் கூடிய ஒவ்வொரு சொல்லாலயும்  என்ன நன்மை கிடைக்கும்ங்கிறதை ஆராய்ந்து பார்த்துதான் சொல்லுவாவொ. அப்படிப்பட்டவொ எந்த ஒரு பயன் தராத சொல்லையும் சொல்லவே மாட்டாவொமாப்ளை.

குறள 201 
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

மாப்ள.. சில கெட்ட பயலுவொ இருக்கானுவொ.. அவனுவொ தீய செயல்கள் செய்ய அஞ்சவே மாட்டானுவொ. 

ஆனா.. இந்த மேன் மக்கள் இருக்காவொள்லா.. அவொ கெட்ட செயல்கள்  செய்யதுக்கு ரொம்பவே அஞ்சுவாவொ.

குறள் 204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

ஏல மாப்ள.. மறந்து போய் கூட நாம யாருக்கும் கெடுதல் செய்ய நினைச்சிறக் கூடாது. அப்படி நெனச்சுட்டாலே போதும்.  அறம் நம்மைச் சுத்தி நின்னுக்கிட்டு கெடுதல் செய்ய நெனைக்கும் மாப்ள..(தொடரும்)

வேட்டை 
E-mail; vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post