புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -114

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா -114


பாம்பு குருவிக்குஞ்சுகள் இருக்கும் கூட்டை நோக்கி ஊர்ந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டதும், ஆண் பறவை பதட்டத்தோடு அங்கிருந்து பறந்து சென்று,  சில நொடிகளில்  ஏதோ ஒரு சிறிய கிளையைத் தனது சொண்டில் கவ்விக் கொண்டு வந்து, அந்தக் கூட்டை மூடி மறைத்தது!

இலைகுலைகளால் மறைப்பது ஒரு முட்டாள்தனமான பாதுகாப்பு நடவடிக்கை என செரோக்கி  தனக்குள் நினைத்துக் கொண்டான்!

பிறகு குருவிகள்  இரண்டும் இணைந்தவாறு அருகில் இருந்த மரக்கிளையில் நின்றுகொண்டு, நடக்கப்போவதை உண்ணிப்பாக அவதானித்தன. செரோக்கியும் அவனது தந்தையும் நடப்பதை ஊர்ந்து  அவதானிக்கலாயினர்!

பாம்பு மெல்ல ஊர்ந்து வந்து  கூட்டை நெருங்கியது! குஞ்சுகளின் கதை முடிந்துவிட்டது என்றுதான் செரோக்கியும் அவனது  தந்தையும்  நினைத்தனர்!

அந்த இலைகுலைகளால் மூடப்பட்டிருந்த கூட்டுக்குள் பாம்பு தன் தலையை நுழைக்க முற்பட்டபோது, திடுதிப்பென பாம்பு  பதறியபடி பின்வாங்கிக் கூட்டை விட்டும் வேகமாக ஊர்ந்து செல்லலானது!

என்ன நடந்தது என்பதை செரோக்கியாலும் அவனது தந்தையாலும்  புரிந்துகொள்ள முடியாமற்போய்விட்டது!

ஆனால் நடந்தவை அந்தத் தாய் தந்தைக் குருவிகளுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது! அவைகள்  இரண்டும் தங்கள் குஞ்சுகளைக் காப்பாற்றிய குதூகலத்தில் இருந்ததை செரோக்கியும் அவனது தந்தையும்  அவதானித்தனர்!

பாம்பு நகர்ந்துவிட்டதும், கூட்டுக்கு மேலிருந்த அந்தக்கிளையைத் தந்தைக்குருவி அகற்றி எடுத்து வீசியபோது,  அது செரோக்கியின் காலடியில் வந்து விழுந்ததது!

அதனை அவன் எடுத்துத் தனது பைக்குள் திணித்துப் பத்திரப்படுத்திக் கொண்டான்!

அதன் பிறகு அவர்கள், பெரியவரும்  இர்வினும் கதைத்துக் கொண்டிருந்த அந்தத் தம்பப்பட்ட மரத்தடிக்கு வந்தனர்!

 தொடர்ந்து தன் கதை கூறிக்கொண்டிருந்தார் பெரியவர்! சுவாரஷ்யமாக அதனைக் கேட்டுக்கொண்டிருந்தான் இர்வின்!

“எனது வாழ்நாள் இன்றோ நாளையோ தெரியாது. ஆனால் நான் இறப்பதற்கு முன் இவ்வுலகிற்கு செய்ய வேண்டிய பணிகள் சில என் முன் இருக்கின்றன. அவற்றை நிறைவு செய்ய உன் துணை எனக்குத் தேவை!” என்று இறுதியாக இர்வினின் உதவிக்காக இறங்கிவந்தார்  பெரியவர்.

“நல்லது பெரியவரே! என்னாலான உதவியை நான் தங்களுக்குச் செய்யாதிருப்பேனா?” என்று பணிவுடன் கேள்வி எழுப்பியபோது, பெரியவரின் முகம் மலர்ந்ததை செரோக்கியும் அவனது தந்தையும் கவனிக்கத் தவறவில்லை!

பெரியவரின் தந்தை நூற்றாண்டுக்கு முன்னர் தேடிவந்த நூலைக் கண்டுபிடித்து, அதில் பொதிந்துள்ளவற்றை உலகமயப்படுத்த உறுதி கூறிநான்!

அதன் பின்னர் அவர்கள்,  தொங்கிகொண்டிருந்த  விழுதில் தொற்றியேறி,  பெரியகல்லின் மேல் மட்டத்திற்குவந்து, எச்சங்கள், மூலிகைகள் திரட்டுவான்வேண்டி, ‘அமேசான்’ வனத்தை நோக்கித் தம் பயணத்தைத்  தொடர்ந்தனர்!    

(தொடரும்) 


Post a Comment

Previous Post Next Post