கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-17

கம்பராமாயணம் குறள் வெண்பா முயற்சி-17

 
வீடணன் அடைக்கலம்
வீடணன் ராமனிடம் சென்று சரணடைய
நாடகன்றுச் சென்றான் விரைந்து.


அனலனோ வீடணன் நோக்கத்தைப் பற்றி
மயிந்தனிடம் சொன்னான் உவந்து.


மயிந்தனும் ராமனிடம் சொன்னான்! கருத்தைத்
தெரிவிக்கக் கேட்டான் தெளிந்து.


அண்ணனை விட்டு வருவது நீதியல்ல
என்றுரைத்தான் சுக்ரீவன் அங்கு.


இவனும் அரக்கன்! அரக்க குலத்தை
விரைந்தழிக்க சூளுரைத்தோம் நாம்.


பலவாறாய்க் கேட்டறிந்த ராமன், அனுமன்
உளமறிய ஆவலுற்றான் அங்கு.


அனுமன் கருத்து:
அண்ணலே! உள்ளம் அறிந்துவந்தான் வீடணன்!
அன்புடன் ஏற்கலாம் நாம்.


ராவணன் என்னைத்தான் கொல்லப் பணித்தபோது
வீடணன் சொன்னான் துணிந்து:


“தூதனைக் கொல்வது நீதியல்ல!என்றுரைத்தான்!”
வேதவித்தைப் பார்த்துரைத்தான் பார்.


வீடணனை ராமன் அழைத்துவரச் சொல்லித்தான்
நாடறிய ஏற்றான் மகிழ்ந்து.


இராமனின் பெருந்தன்மை!
நாங்களோ நாலவராய் வாழ்ந்தோம்! குகனுடன்
பாங்காக ஐவரானோம்! அன்று!


சுக்ரீவன் வந்தான் அறுவரானோம் மண்னகத்தில்!


தக்கதுணை என்றிருந்தேன் இங்கு.
வீடணா! இன்றுன்னைச் சேர்த்தோ எழுவரானோம்!


நாடகன்ற என்னுறவைப் பார்.
அனுமனின் வீரத்தை வீடணன் அங்கே
அணுவணுவாய்ச் சொன்னான் மகிழ்ந்து.


சேதுபந்தனம்  
வருணன்   வழிவிட ராமனோ கேட்டும்
வரவில்லை!  நின்றான்  சினந்து.


அம்புகளை ராமன் விடுத்தான்! கடலங்கே
பொங்கி வழிந்தது பார்.


கண்ட வருணனோ ஓடிவந்தான் ராமனிடம்!
தஞ்சமென்றான்   வந்து பணிந்து.


வருணன்கருத்து:
"சேதுவில் கல்லால்   அணைகட்டிச் செல்லுங்கள்
தோதாகும்    தீவின் வழி."


அணைகட்டச் செய்தே இலங்கையை நோக்கி
வினைமுடிக்கச் சென்றார் விரைந்து.


அறிந்தான் இராவணன்! தூதர் குரங்கு
வடிவத்தில் சென்றனர் அங்கு.


வேடமிட்ட ஒற்றரை ராமனோ மன்னித்து
நாடறிய விட்டுவிட்டான் பார்.


ஒற்றரிடம் வீடணன் ராமன் தனக்கரசை
ஒப்படைத்தான்!  இங்குவந்த ராமன்
அரக்கர் குலத்தை அழிப்பான் என்றே
உரையென்றான் தூதரைப் பார்த்து.


அரண்மனைக் கோபுரத்தில் ராவணன்! ராமன்
சுவேல மலைமீது பார் !
வீடணன் ராவணனைக் காட்டியதும் சுக்ரீவன்
வேகமாய்ப் பாய்ந்தான் சினந்து.


வேந்தன் மணிமுடியைக் கையால் பறித்தெடுத்தான்!
மீண்டுவந்தான் ராமனிடம் தான்.


ஆளுக் கொருதிசையில் நின்றார் அணிவகுத்து!
மூளுகின்ற  போர்க்களம் பார்.


இராமனின்முயற்சி
சீதையை விட்டுவிடு என்றேதான் வேந்தனுக்குத்
தூதனுப்ப வீடணனே! சொல்.


வெகுண்டான் இலக்குவன்! ராமனோ ,  தம்பி!
பொறுத்திரு என்றான் கனிந்து.


அங்கதன்தூது.
அங்கதனை ராமன் அழைத்தான்! தூதனாக
அங்கேநீ செல்லென்றான் பார்த்து.


சீதையை விட்டுவிடு ராவணா! உன்னுயிரை
காப்பதற்கோ அஃதே வழி.


இல்லையேல் போரிலே சந்திக்க வந்துவிடு!
சொல்லித்தான் வந்துவிடு நீ.


அங்கதனைக் கண்டதும் ராவணன் யார்நீயோ?
என்றுகேட்டான் நேரடியாய்ப் பார்த்து.


இந்திரன் மைந்தன்நான் என்றதும் ,ராவணன்
நண்பன் மகனென்றான்  வந்து.


பட்டம் மணிமகுடம் உண்டுனக்கு! நான்தருவேன்!
இச்சையை ஊட்டினான்  கேள்.


அங்கதன் கைதட்டிச் சிரித்தேதான்  உன்தம்பி
அங்கிருக்க எனையிழுப்ப தேன்?
என்றே மறுத்துவிட்டு தேவியை விட்டுவிடு
இன்றேல் மடிந்துவிடு நீ.


காகுத்தன் சொல்லிவரச் சொன்னான்  என்றதும்
ராவணன் சீறினான் பார்.


வீரரை ஏவினான்! அங்கதன்நால் வரையும்
பார்த்தழித்தான் பாய்ந்து சினந்து.

பிடிவாதம் கொண்ட இராவணன் வீழ்ந்தால் 
மடியலாம் ஆசையென்றான் நின்று.

கும்பகருணன்வதை --
இலங்கைக்குள்இராவணனின்கோலம்:
எண்ணற்ற வெற்றிகளின் நாயகன் ராவணன்
தன்னாடு வந்தான் குலைந்து.


தன்னுடைய தோல்வியை மற்றவர்கள் கேலிசெய்வார்
என்றேதான் வாடவில்லை வேந்து.


சீதை அறிந்தால் இகழ்வாளே என்றெண்ணி
வேதனை கொண்டான் தவித்து.


தாய்வழிப் பாட்டனான மாலியவான் ராவணனை
போர்விளைவைக் கேட்டான் விழைந்து.


இராவணன்புகழ்ந்தஇராமன்:
வேதநெறி தப்பினாலும் தப்பலாம்! ராமனின்
ஈடற்ற விற்குறி தப்பாது.


மலையைப் பிளந்துசெல்லும்! விண்ணைக் கடக்கும்!
நிலத்தையும் ஊடுருவும் அம்பு.


கடல்களை அள்ளிக் குடிக்கின்ற ஆற்றல்
படைத்தது ராமனின் அம்பு.


ராமனின் ஆற்றலை சீதையோ சொன்னதுதான்!
ராவணன்   நம்பவில்லை அன்று.


அமைச்சர் மகோதரன் ராவணனைத் தூண்டி
இமைக்காமல் சொன்னான் துணிந்து:


போருக்குக்   கும்பகர்ணன் போகலாமே என்றுசொன்னான்!
ராவணனும் ஏற்றான்பார் அங்கு.
(தொடரும்)


Post a Comment

Previous Post Next Post