பல லட்சம் மோசடி செய்ததாக 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு

பல லட்சம் மோசடி செய்ததாக 9 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது வழக்கு


மறவமங்கலம் ஊராட்சியில் மத்திய அரசின் இலவச கழிப்பிடம் திட்டத்தில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.) 9 பேர் மீது, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் மறவமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 2015 முதல் 2019 வரை, பிரதமரின் இலவச கழிப்பிட திட்டத்தில் 403 கழிப்பிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது.

முருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்கும் நளினி.. சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைமுருகனுக்கு 6 நாட்கள் பரோல் கேட்கும் நளினி.. சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணை

இதில் 373 கழிப்பிடங்கள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. இந்த காலகட்டத்தில் ஒரே குடும்பத்தில் இருவர் பெயரில் கழிப்பிடம் கட்ட நிதி ஒதுக்கி அங்கு ஒரு கழிப்பிடம் மட்டுமே கட்டப்பட்டு மற்ற கழிப்பிடத்திற்கான பணம் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் வாடகை வீட்டில் வசிப்போர் பெயரிலும் கழிப்பிடம் கட்டியதாக கணக்கு காட்டி மோசடி நடைபெற்றதாகவும், 30 கழிப்பிடங்களை கட்டாமலேயே கட்டப்பட்டதாக அதிகாரிகள் கணக்கு காட்டியதும் அம்பலமானது. ஒரு கழிப்பிடம் கட்ட ரூ.12,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 30 கழிப்பிடங்கள் கட்டாமலேயே கட்டியதாக ரூ.3.60 லட்சம் ரூபாயை மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பல கழிப்பிடங்களை முழுமையாக கட்டி தராமல் அந்த பணத்தையும் எடுத்து சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் மறவமங்கலம் ஊராட்சியில் இதேபோல் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இந்த ஊழல் குறித்து பால்குளம் அரிமுத்து என்பவரின் மகன் கண்ணன் ஒழிப்புத்துறை இயக்குனருக்கு புகார் அளித்தார்.

இதன் மீது உரிய விசாரணை நடத்த சிவகங்கை லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி.ராமச்சந்திரனுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவர் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மோசடி நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மறவமங்கலம் ஊராட்சி செயலர் முத்துக்கண்ணு காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பி.டி.ஓ.வாக, பணியாற்றி ஓய்வுபெற்ற செல்வராஜ், அமலற்பவம், சந்திரா, நசீரா பேகம், அன்புதுரை, இளங்கோ தாயுமானவர், பி.இளங்கோ, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பிடிஓ ரமேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் மோசடி வழக்கு பதிந்துள்ளனர். இதில் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், நேற்று முன்தினம் ஓய்வு பெற இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.


Post a Comment

Previous Post Next Post