கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரியா. இவர் வசிக்கும் பகுதியில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள இடுக்கி பீர்மேட்டில் இவரது தம்பி கிருஷ்ணபிரசாத் (21), வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மே 24ம் தேதி உலக சகோதரர்கள் தினத்தன்று தனது சகோதரி கிருஷ்ண பிரியா தனக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிருஷ்ண பிரசாத் வருத்தமடைந்தார்.
மேலும், தனது சகோதரரின் அழைப்புகளையும், மெசேஜ்களையும் கிருஷ்ண பிரியா ஏற்கவில்லை. பிறர் தனக்கு அனுப்பிய சகோதரர் தின வாழ்த்துக்களின் ஸ்கிரீன்ஸாட்களையும் கிருஷ்ண பிரசாத் பகிர்ந்திருந்தார். மேலும், கோபத்தில் தனது சகோதரியை வாட்ஸ் அப்பில் கிருஷ்ண பிரசாத் பிளாக் செய்தார்.
தனது தம்பி கோபத்தில் இருப்பதை அறிந்த கிருஷ்ண பிரியா தனது உணர்வுகளை கடிதமாக எழுதி சகோதரரின் கோபத்தை போக்க எண்ணினார். ’ஒவ்வோரு முறையும் என் சகோதரருக்கு பிரதர்ஸ் டே அன்று நாள் வாழ்த்து கூறுவேன். இந்த முறை அதிக வேலைகள் இருந்ததால் வாழ்த்து தெரிவிக்க மறந்துவிட்டேன். பின்னர் எனது சகோதரர் அனுப்பிய ஸ்கீரின்ஸாட்களை பார்த்ததும் கவலை அடைந்தேன்’ என தெரிவித்த கிருஷ்ண பிரியா, தனது சகோதரருக்கு கடிதம் எழுத திட்டமிட்டார்.
இதையடுத்து, 15 பண்டல்கள் பேப்பர்களை வாங்கிய அவர் 12 மணி நேரம் எழுதி 434 மீட்டர் நீளத்தில் 5 கிலோ எடையில் கடிதத்தை எழுதி முடித்துள்ளார். ‘என் வாழ்க்கையில் அவரைப் போன்ற ஒரு சகோதரர் கிடைத்ததில் நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று எனது கடிதம் தொடங்குகிறது. நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள், என் சகோதரர் கடவுளின் மிகப்பெரிய பரிசு. நாங்கள் எவ்வாறு ஒன்றாக பிறந்தநாளை கொண்டாடினோம் ஆகியவற்றை கடிதத்தில் எழுதினேன்’ என்று அவர் கூறியுள்ளார்.
மேலும்,’ எனது 7 வயதில் என் சகோதரரை என் கையில் தாங்கினேன். என் கையில் இருந்த அவன் சிரித்தேன். குழ்ந்தையாக இருந்தபோது என் சகோதரன் பேச நீண்ட நாட்கள் ஆனது. இதற்காக தினமும் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். அவன் பேச தொடங்கியபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவனுக்கு நான் தாயை போன்றும் எனக்கு அவன் குழந்தை போன்றும் உணர்ந்தேன்’ என்று நெகிழ்ச்சியுடன் கிருஷ்ண பிரியா தெரிவித்தார். மேலும், தனது நீண்ட கடிதத்தை கின்னஸ் சாதனைக்கும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
news18
Tags:
வினோத உலகம்