கனடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர் .. என்ன நடக்குது..?!

கனடாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறும் வெளிநாட்டினர் .. என்ன நடக்குது..?!


இந்தியா - கனடா இடையிலான பிரச்சனைகளுக்கு மத்தியில் கனடா அரசு இந்தியர்களுக்கான விசா பிராசஸ் வேகத்தை தற்காலிகமாக குறைத்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பல இந்தியர்கள், அடுத்து எந்த நாட்டுக்கு செல்லலாம் என யோசிப்பதற்குள் கனடா சில பிரிவு விசா சேவைகளை மட்டும் இந்தியர்களுக்கு அளிப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில் கனடா நாட்டில் இருக்கும் இந்தியர்கள் மற்றும் பிற வெளிநாட்டவர்கள் குறித்து முக்கியமான ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கடந்த சில ஆண்டுகளில் கனடாவிற்கு புதிதாக சென்ற வெளிநாட்டவர்கள் அதிகமான அந்நாட்டை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கனடா நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது வெளிநாடுகளில் இருந்து அங்கு குடியேறியவர்கள் தான், இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் அதிகளவில் வெளியேறுவது கனடா நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. 

கனடாவில் நீண்ட காலமாகவே வெளிநாட்டினரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் குடியேறியவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது இதுகுறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கனடாவில் 1980 களில் இருந்து அந்நாட்டை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்தோரின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பெரிய விஷயமாக பார்க்கப்படாமல் இருந்தது, ஆனால் சமீபத்தில் கனடாவில் பல பிரச்சனைகள் எழுந்து வரும் காரணத்தால் கடனாவிற்கு செல்வோர் விகிதத்தில் கணிசமான தடுமாற்றமும், வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

இதற்கு முக்கியமான காரணம் கனடா நாட்டிற்கு புதிதாக வந்தவர்கள், அந்நாட்டிற்கு செல்வதால் நன்மைகள் இல்லை என்று நம்பலாம் என கனடா குடியுரிமை அமைப்பு மற்றும் கனடாவின் மாநாட்டு வாரியம் நடத்திய புலம்பெயர்ந்த மக்களை தக்கவைப்பது குறித்த ஆய்வறக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான இந்த ஆய்வறிக்கையில் கனடா நாட்டிற்கு புதிதாக வந்த வெளிநாட்டவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் ஏற்படும் அபாயங்கள் தான் அதிகப்படியான வெளியேற்றத்திகற்கான காரணமாக இருக்கலாம் என்பதை காட்டுகிறது. 

மேலும் கனடாவில் புதிதாக வரும் வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் மோசமான வீட்டு வசதி, கடினமான சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வேலையின்மை போன்றவையும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. மறுமுனையில் கனடா அரசு ப்ளூ காலர் முதல் வொயிட் காலர் வரையில் அனைத்து பிரிவுகளிலும் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் முக்கியமான விசா மாற்றங்களை அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


goodreturns


 



Post a Comment

Previous Post Next Post