
இறையொளியின் ஞானம் , அதாவது மெய்ஞானம் , அது இறைநேசர்களின் உள்ளத்தில் இருக்கிறது . அதனை புத்தகத்தின் வாயிலாகவோ , உரையாடலின் மூலமாகவோ பெற்றிட முடியாது .
அந்த மெய்ஞானத்தை இதயத்தோடு இதயமாகத்தான் பெற்றிட
முடியும் . புத்தகத்தின் வாயிலாகவோ , வாய்மொழியாகவோ அதனை பெற்றிட முடியாது .
சாதகரின் உள்ளத்தில் அந்த இரகசியங்கள் எல்லாம் குடியிருப்பினும் அவை இருப்பதாக சாதகருக்கு அதுவரை தெரிய வருவதில்லை .
அவனது உள்ளத்திற்கு அந்த ஒளியானது விளக்கம் தந்து விடுகிறது . இறைவனே நன்மாராயத்தை கூறுகிறான்- உமது உள்ளத்தை நாம் விரிவாக்கி விடவில்லையா ?
அதாவது நாம் உம் உள்ளத்திலே அதன் விளக்கத்தை அருளிவிட்டோம் . நாம் உம் இதயத்திலே அதன் விரிவாக்கத்தை வைத்து விட்டோம்.
இதுவரை நீ அதற்காக வெளியிலிருந்தே தேடிக் கொண்டிருக்கிறாய் . நீயே பாலாக இருக்கின்றாய் . அப்படியிருக்க அடுத்தவர்களிடமிருந்து ஏன் பாலை கறந்துக் கொண்டிருக்கிறாய் ?
தெளிவுரை : சாதாரண மனிதன் , ஞானங்களும் , இரகசியங்களும் வெளியிலிருந்து தான் வருகின்றன என கருதிக் கொண்டிருக்கிறான் . அவை யாவும் அவனுடைய உள்ளத்திலும் , ஆன்மாவிலும் தான் உள்ளன என்பதை அவன் அறிவதில்லை .
பாரசீகஞானி
மௌலானா ஜலாலுதீன் ரூமி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments