18.07.22

சங்கர லிங்கனார் உண்ணா விரதத்தை
தன்னந் தனியராக ஏற்றுத் தமிழ்நாடு
என்னும் பெயர்மாற்றக் கோரிக்கை முன்னெடுத்தார்.
அண்ணா,பெருந்தலைவர் எல்லோரும்
சொல்லியும் பின்வாங்கும் எண்ணமின்றி
இன்னுயிரை ஈந்துவிட்டார்!
அண்ணா முதல்வர் பொறுப்பேற்றார்! சங்கரர்
எண்ணம் கனிந்ததைப் பார்.
பெற்றெடுத்த தாய்நாடு நம்தமிழ் நாடென்றே
நற்றமிழால் கும்பிடடி பாப்பாநீ என்றுதான்
அப்போதே பாடினான் பாரதி!
தமிழ்நாடு நற்பெயரை
சட்டமன்றம் உச்சரிக்க வாழ்கவென்றே
வாழ்த்தினார்கள்!
வெற்றி முழக்கம் இமயமலைச் சாரலிலே
முட்டி எதிரொலித்த அந்த எழுச்சிநாளை
அற்புத மாகத் தமிழ்நாடு என்றுரைத்தே
சுற்றமுடன் கொண்டாடு வோம்.
மதுரை பாபாராஜ்


0 Comments