
குறள் 474
அமைந்தாங்
கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான்
விரைந்து கெடும்.
மாப்ள..
நம்ம திருவளத்தான் இருக்கான... அவன் பக்கத்துல
இருக்க ஆளுங்களோட எப்பமும் ஒத்து போவமாட்டான். தாங்கிட்ட
அப்பிடி என்ன சரக்கு இருக்குன்னு அவனுக்கே தெரியாது. ஆனா தன்னைப்
பத்தியே எப்பமும் பவுசு கொழிச்சிட்டு இருப்பான். இந்த மாதிரி
இருக்கவனுவொ சீக்கிரம் சீரழிஞ்சு பொயிருவானுவொ மாப்ள.
குறள்
479
அளவறிந்து
வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித்
தோன்றாக் கெடும்.
மாப்ள..
கையிருப்பு எம்புட்டு இருக்கு, அதுக்குள்ள
செலவை எப்பிடி சமாளிக்கது ங்கிறது பத்தில்லாம் ஒரு மண்ணும் தெரியாம ஒருத்தன் கண்டமானிக்குச் செலவழிச்சாமுன்னா, அம்புட்டுத்தான்.
வசதி எல்லாம் இருக்க மாதிரியே தாக்காட்டிட்டு, ஒண்ணும்
இல்லாமப் பொயிரும் மாப்ள..
குறள் 480
உளவரை
தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை
வல்லைக் கெடும்.
மாப்ள..
கண்டமானிக்கு வாரவம் போறவனுக்குல்லாம் கைல இருக்கதை தூக்கி கொடுத்திறக்கூடாது.
நம்ம கிட்ட
என்ன ஐவேசு இருக்குங்கிறதை பாத்து கிட்டுதான் அதுக்கு ஏத்த மாறித்தான் கொடுக்கணும்.
இல்லன்னா
கைல இருக்கதை கரைச்சிட்டு நாம லொண்டாதான் போடணும்.
குறள் 482
பருவத்தோடு
ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை
ஆர்க்குங் கயிறு.
எந்த ஒரு வேலையையும்
நெனச்ச நேரத்துல செஞ்சிறப்பிடாதி. சரியான
பருவம் பாத்து தான் செய்யணும் மாப்ள.
அது தான் மாப்ள..
நம்ம கிட்ட இருக்க செல்வம்லாம் நம்மளை விட்டுட்டுப் போகாம இருக்கும்படி கட்டிப் போடுத கயிறு.
குறள் 487
பொள்ளென
ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர்
ஒள்ளி யவர்.
மாப்ள..
எதிரிங்க செஞ்ச வேலைக்காக அவங்க மேல உள்ள கோவத்தை அறிவாளிங்க வெளிய காட்டவே மாட்டாங்க. ஆனா உள்ளுக்குள்ளயே
அடக்கி வச்சு சரியான நேரம் வார வரைக்கும் காத்திருப்பாங்க மாப்ள.
(தொடரும்)

0 Comments