சீனாவிடம் வாங்கிய 9.95 பில்லியன் டொலர் கடனை இலங்கை எப்படித் திருப்பிக் கொடுக்கும்?

சீனாவிடம் வாங்கிய 9.95 பில்லியன் டொலர் கடனை இலங்கை எப்படித் திருப்பிக் கொடுக்கும்?


இலங்கைசீனாக்கு  செலுத்த வேண்டிய கடனை இலங்கையில் உள்ள சீனாவின் திட்டங்கள் மூலம் ஈடுசெய்ய விரும்புவதாக சீனா அறிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் முக்கியப் பிரச்சினையாக இருந்த சீனக் கடன் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு வழியாக இலங்கை அரசாங்கம் இதை ஏற்றுக்கொள்ளலாம் என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வழங்கப்பட்ட 9.95 பில்லியன் டொலர் கடன்களை மறுசீரமைக்க சீனா உடன்படவில்லை, அதாவது திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க விரும்பவில்லை.

இந்த நிலையில், கடன் கொடுப்பனவை பிற்போடுவதற்குப் பதிலாக இலங்கையில் சீனத் திட்டங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சர்வதேச மாநாட்டு அரங்குகள், மைதானங்கள், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், தாமரை கோபுரம் மற்றும் பல கட்டுமானங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது.

அவற்றில் இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதில் முக்கியமான நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் மத்தள விமான நிலையம் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை ஆலையின் கட்டுமானத்திற்காக, முதல் கட்டத்தில் 155 மில்லியன் டொலர்கள், இரண்டாம் கட்டத்தில் 300 மில்லியன் டொலர்கள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 891 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், 214 மில்லியன் டொலர் செலவில் மொரக்கஹகந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் பல நீர்ப்பாசனத் திட்டங்கள் உள்ளன.

உலக அரசியலில், சீனாவுக்கு எதிரான முகாமுக்கு இலங்கை தெளிவான விசுவாசத்தைக் காட்டுவதன் காரணமாகவே இலங்கைக்கு வழங்கிய கடனை மறுசீரமைக்க சீனா விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

உலக இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் இலங்கை நட்புறவுடன் உள்ளது. அதேநேரம் இராஜதந்திர உறவுகளுக்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்துடனான,இலங்கையின் பரிவர்த்தனைகளில் சீனா மகிழ்ச்சியடையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையின் பெரும்பாலான கடன்கள் சீனாவிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இலங்கையின் கடனில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனக் கடனாகும்.

இதன் விளைவாக, இலங்கையின் கடனை உறுதிப்படுத்துவதில் சீனக் கடனை மறுசீரமைப்பது மிகவும் முக்கியமானது, அதாவது சீனா தனது கடன் தவணைகளின் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீடிக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.

இலங்கையின் சீனக் கடன் மறுசீரமைக்கப்படும் வரை சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை மறுசீரமைப்பதில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் தெளிவாக முடிவடையும் வரை இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது கடினம் என குறித்த செய்தித்தாள் சுட்டிக்காட்டியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post