பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி நோய்கள்

பெண்களின் இனப்பெருக்கத் தொகுதி நோய்கள்


POLY Cystic ovarian syndrome (PCOS) எனப்படும் இந்நோயானது பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியுடன் சம்பந்தப்பட்ட இளம் பெண்களிடையே அதிகமாகக் காணப்படக்கூடிய ஒரு நிலையாகும்.

PCOS அல்லது சிலவேளைகளின் PCOD எனச் சுருக்கமாக அழைக்கப்படும் நோயைப்பற்றிய சரியான தகவல்களைப் பெறுவதாயின் பெண் இனப் பெருக்கத் தொகுதியின் முக்கிய உறுப்பான சூலகத்தைப்பற்றி தெரிந்திருப்பது முக்கியமாகும். 

கருப்பையின் இருபக்கங்களிலும் அமைந்துள்ள சூலகம் (ovary) எனப்படும் இவ்வுறுப்பின் ஒழுங்கான தொழிற்பாட்டில் தான் ஒழுங்கான மாதவிடாய்ச் சக்கரம் தங்கியுள்ளது. 
அத்துடன் சூலகத்தினால் சுரக்கப்படும் பல ஹோர்மோன்கள் செயற்பாட்டினால் கருக்கட்டுவதற்கு தேவையான முட்டை உருவாக்கப்படுகிறது. PCOD என்ற இந்நோய் நிலையில் ஒழுங்கான மாத விடாய் சக்கரத்திலும் முட்டை உருவாக் கத்திலும் பல சிக்கல்களை ஏற்படுத்தி பிள்ளைப் பாக்கியமற்ற நிலையை உருவாக்கும்.

PCOD 5 முதல் 10 வீதமான இளம் பெண்களில் காணப்படுகின்றது. இங்கு சூலகத்தினால் திரவப் பதார்த்தங்கள் அடங்கிய பல கட்டிகள் உருவாகி அது சூலகத்தின் வழமையான தொழில்களை செய்வதற்கு சாதகமற்ற நிலையை உருவாக்குகின்றது. இதன் பிரதான விளைவுகளில் ஒன்றுதான்  பிள்ளை பாக்கியம் இல்லாமல் போதல்.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும் அதாவது அனேகமான PCOD நோயாளர்களுக்கு இந்த நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படாது. ஆனால் அவர்களின் திருமணத்தின் பின்பு பிள்ளை பாக்கியமற்ற காரணத்திற்காக வைத்தியப் பரிசோதனைகள் செய்யும் போதே இந்நோய் தெரிய வரும்.

PCOD ஏற்படுவதற்கான காரணங்கள் இதுவரை சரியாகத் தெரியவில்லை ஆனாலும் இன்சுலின் அளவுக்கு அதிகமாக இருத்தல் மன அழுத்தம் போன்ற காரணிகள் மூலம் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றன எனது 23 வருட கால மருத்துவத் தொழிலில் நான் அவதா வித்த ஒரு விடயம் தான்  (pastry, bun, cutlet) மற்றும் இரசாயன பொருட்களடங்கிய மென்பானங்கனையும் உட்கொள்ளக் கூடிய இளம் பெண்களிலேயே இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது. இது தவிர அதி உடற் பருமன், இளம் வயதில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய், குடற்புண் போன்ற நோய்களுக்கும் மேற் கூறிய உணவு வகைகள் காரணமாக இருக்கின்றன.

PCOD  இற்கான முக்கிய அறிகுறிகள் ஆரம்பத்தில் தென்படாது. ஆனால் ஒழுங்கற்ற மாதவிடாய் சக்கரம், அதிக மாக முகப் பருக்கள் உண்டாதல், அதிக உடற்பருமன், முகம் உட்பட உடம்பில் பல பகுதிகளில் முடி வளர்தல், உடம்பில் பல இடங்கள் கறுப்படைதல் போன்றவைகள் இருக்கலாம். அத்துடன் திருமணமானவர்களாயின் பிள்ளைப் பாக்கியமும் இருக்காது.

இங்கு ஒரு முக்கியமான விடயத்தைக் குறிப்பிட வேண்டும். அதாவது மேற் கூறிய நோய்க் குறி குணங்களுடைய அனேகமான இளம் பெண்கள் வைத்தியர்களிடம் ஆலோசனை பெறாமல் கவனயீனமாக இருந்து பின்பு ஏதாவது பாரிய மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டதன் பின்பு கவலைப்படுகிறார்கள்.

PCOD நோய் இருப்பவர்களுக்கு இன்சுலின் செயலாற்ற முடியாத நிலை, வயிற்றில் அதிக கொழுப்புப் படிதல், அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல், உடற்பருமன் கூடிக் கொண்டு போதல், தூங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் போன்றவைகள் ஏற்படலாம், நவீன வைத்தியத்துறை அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை PCOD நோயின் குறி குணங்களுக்கு ஏற்ப மாற்றுவதனையே வலியுறுத்துகின்து. அதாவது குறைந்த கலோரியுடைய உணவு வகைகள் உடற்பருமனை குறைத்தல், உடற்பயிற்சிகளை ஒழுங்காகவும் முறையாகவும் கடைப்பிடிப்பதற்குரிய ஆலோசனைகள் முக்கியமாக வழங்கப்படுகின்றன. அத்துடன் நோய்க் குறிகுணங்களுக்கு ஏற்ப விஷேட சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. 

யுனானி வைத்தியத்துறையிலும் PCOD இற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. இங்கு சூலகத்தின் தொழிற்பாட்டை  சீர் செய்தல் அதிக மாத விடாய்ப் போக்கை நிறுத்தல் மற்றும் உடற்பருமனை குறைத்தல் போன்றவற் நிக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் இங்கு ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் தகைமை வாய்ந்த நன்கு தேர்த்தி பெற்ற வைத்தியர்களிடம்  சிகிச்சை பெறுவதே முக்கியமாகும்.  கொழும்பு பல்கலைக்கழக புனானி மருத்துவ பத்தின் சில விரிவுரையாளர்கள் நோய்க்கு சிகிச்சை செய்து பலர் திருப்திகரமான விளைவுகளைப் பெற்றுள்ளனர். அத்துடன் ஒரு  சிலர் பிள்ளைப்போக்கியத்தையும் பெற்றுள்ளனர். வைத்தியச் சிகிச்சை பெற்றால் இன்ஷா அல்லாஹ் பலன் கிடைக்குமென நினைக்கின்றேன். 

இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாக இளம் பெண்களுக்கு ஒரு செய்தியாக உங்களுக்கும் நான் மேலே குறிப்பிட்டுள்ள குறிகுணங்கள் ஏதாவது இருந்தால் வைத்திய ஆலோசனை பெறவும் அத்துடன் செப்பனிடப்பட்ட உணவுகளையும் மென்பானங்களையும் உட்கொண்டு இது போன்ற நோய்கள் வருவதற்கு நீங்களே காரணமாக வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.



Post a Comment

Previous Post Next Post