எகிப்தின் (கெய்ரோ )மெட்ரோ ரயிலில் பெண் ஓட்டுனர்கள்

எகிப்தின் (கெய்ரோ )மெட்ரோ ரயிலில் பெண் ஓட்டுனர்கள்

எகிப்திய ஹிந்த் ஓமர், வணிகப் பட்டதாரி மற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயார், நாட்டில் உள்ள இரண்டு முன்னோடி பெண் ஓட்டுநர்களில் ஒருவர்.
பெண்களுக்கான தொழில் வாய்ப்புக்களை  அதிகரிக்கும் நோக்கத்துடன் மக்களுக்கு சேவை செய்ய    பெண்  (மெட்ரோ)ரயில் ஓட்டுனர்களை எகிப்து நியமித்துள்ளது, 

இது பெண்களுக்காண வேலைவாய்ப்புக்களை அதிகரிக்கும் புதுமைத் திட்டம் என்று எகிப்து தெரிவித்துள்ளது. 

எகிப்திய பெண்களுக்கு 1956 முதல் வாக்களிக்கவும்  மற்றும் பதவிக்கு போட்டியிடும்  உரிமையும்  வழங்கப்பட்டது.ஆனால் ஆணாதிக்க சட்டம் மற்றும்  கலாச்சார கட்டுப்பாடுகள்  ஆகியவை பெண்களின் தனிப்பட்ட உரிமைகளை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளன.

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும்  பாதுகாப்புக் காரணங்களுக்காகவும்    ஆண்களுடன் சவாரி செய்ய விரும்பாத பெண்களுக்கு கெய்ரோ மெட்ரோ முன்பதிவு செய்யப்பட்ட வண்டிகளை வழங்குகிறது.

2020 புள்ளிவிவரங்களின்படி, 14.3 சதவீத பெண்கள் மட்டுமே ரயில் ஓட்டுநர்  வேலைக்கு ,  விண்ணப்பிப்பதாக   வணிகப் பட்டதாரியும், இரண்டு பிள்ளைகளின் தாயுமான ஹிந்த் ஓமரின் தெரிவிக்கின்றார்.
"ஒவ்வொரு நாளும்  பல ஆயிரம் உயிர்கள் என் பொறுப்பில் உள்ளன .," என்று 30 வயதான ஹிந்த் ஓமர் தெரிவிக்கின்றார் .இந்தத் தொழிலிலுக்கு விண்ணப்பிக்க என்னுடைய குடும்பம் முழு ஆதரவையும் வழங்கியது என் அதிர்ஷ்டம் என்று நினைக்கின்றேன் "என்றும் கூறுகின்றார்.

"எனது பெற்றோர் முதலில் ஆச்சரியப்பட்டாலும் ,பிறகு ஆதரித்தார்கள்  " என்று அவர் கூறினார்.

"என் கணவர் ஆரம்பத்திலிருந்தே   என்னை ஊக்குவித்தார்."

பெண் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் இரவு நேரப் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதே ஒரு முக்கிய காரணியாக இருந்தது, என்றார்.

ஓட்டுநர்களாக இருக்கக் கூடியவர்களுக்கான சோதனைகள் கடினமானதாக இருந்ததாகவும், வேட்பாளர்கள் தங்கள் "கவனம்" மற்றும் "சகிப்புத்தன்மையை" வெளிப்படுத்த வேண்டும் என்றும் ஓமர் கூறினார்.

வாரத்தில் ஆறு நாள்தான் வேலை.  ஓட்டுநர்கள் " மிகவும் விழிப்புடன்" இருக்க வேண்டும் என்றும், அவர் கூறினார். 
ரயிலின் டிரைவராக  தன்னைப் பார்த்த சில பயணிகள் பயந்ததாக சுசான் முகமது கூறுகிறார். 

'சில பயணிகள் பயந்தனர்'

RATP-Dev உடன் இணைந்து சுரங்கப்பாதைகளுக்கான எகிப்தின் தேசிய ஆணையம் நடத்தும் பயிற்சித் திட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட இரண்டு பெண்களில் ஒமர் ஒருவர்.

மற்றொருவர், 32 வயதான சுசானே முகமது, பிளாட்பாரத்தில் முதன்முறையாக பயணித்தவர்கள் டிரைவராக வண்டியில் தன்னைப் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.

பெண்கள் பல தொழில்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட நாட்டில் பயணிகள் எங்களை பார்த்ததும் ஆச்சரியப்பட்டார்கள்" என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது" என்று அவர் கூறினார்.

"சில பயணிகள் பயந்தனர்,அவர்கள் என் திறமைகளை சந்தேகித்தனர் மற்றும் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பெண்ணுடன் பயணிக்க அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கூறினார்."

1987 இல் தொடங்கப்பட்ட கெய்ரோ மெட்ரோ அரபு உலகில் மிகவும் பழமையானது ஆனால் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் மற்ற அரபு நாடுகளை விட பின்தங்கியுள்ளது.

மொராக்கோவைச் சேர்ந்த சைதா அபாத் 1999 இல் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் முதல் பெண் ரயில் ஓட்டுனர் ஆனார்.

சமீப காலம் வரை பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவில் கூட,  பெண்கள் தற்போது ரயில்வேயில் ஓட்டுநர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கெய்ரோ மெட்ரோ மூன்று புதிய பாதைகள் மற்றும் எகிப்தின் முதல் மோனோரயில் அமைப்பை சேர்க்க திட்டமிட்டுள்ளது.

மேலும் உமர் கூறுகையில் "நான் இந்தத் தொழிலை பெற்றுக்கொண்டது மற்றப் பெண்களுக்கு ஒரு உதாரணமாய் அமையும் என்று நினைக்கின்றேன்"என்றும் தெரிவித்தார் .
கல்ஹின்னை மாஸ்டர் 



Post a Comment

Previous Post Next Post