Ticker

6/recent/ticker-posts

Ad Code



நூல் பொம்மை!


நான் கடலின் மேல் நின்று 
நடனம் புரிய ஆசைப்பட்டவன்
எனது கால்களில் சிறு 
கவலை முள் குத்தியதால்
கைகள் மாறி கால்களின் 
நடனம் மாறி புதிய நடனம் 
பிறப்பித்து விட்டேன்....

இசைதெரியாமல்
காதுகள் அடைக்கப்பட்டு
கண்கள் வண்ணம் பூசப்பட்டு
திறந்த வண்ணமே முகம் 
சிலிர்த்த புன்னகைக் கொண்டு
கழுத்தும்இடையில்
இசையின் நயமும் 
கொண்டதொரு தோல் 
பொம்மை நடனமாய்....

நீலகண்டனின் தொண்டைக்
குழியல் வண்ணம் தடவிய 
விசம்போலகண்ணுக்குத் 
தெரியாத நூல்கொண்டு
கால்களை ஆட்டிவைத்து 
ஆடவைத்துவிடுகிறது
வண்ணங்களை முற்றிலும் 
மறைத்து வெள்ளை 
நூலில் தலையென கையென
காலெனமனதையும் சேர்த்து 
ஆடிய வசியப்படுத்தாத
வனப்புடன் வாழ்கின்ற 
மனிதனாய் மாறிய
நூல் பொம்மைகள்.....!


Post a Comment

0 Comments