Ticker

6/recent/ticker-posts

Ad Code



இதுதான் நாங்கள்!


உள்ளூரிலும் வசப்பாட்டு .
ஊருக்கு வெளியிலும் அதேபாட்டு .
உன் வாய் வலித்த பின்னே
நிப்பாட்டு.

கண்டுக்க மாட்டோம் நாங்கள்.
தூத்துகின்றது  நல்ல வாய்
தொடக்கம் நாறவாய் வரைக்கும்.
காற்றோடு கலக்கின்றதாம் மானம் .
அதைக் கேட்வோருக்குத்தான் 
பெருத்த அவமானம்.

அட மானம் இல்லாத
பிறவிகள் எங்களுக்கு எவ்வழியில்
பறந்திடும் அவமானம்.

வானுக்கும் பூமிக்கும் 
நீங்கள் குதித்தால் என்ன .
வரும் போதும் போகும் போதும்
காறி உமிழ்ந்தால் என்ன .
கடுகளவும் அசரமாட்டோம்.
கனவிலும் திருந்த மாட்டோம்.

நாளும் பொழுதும்
மானம் நாணம்  பறந்தாலென்ன
அது எமக்கில்லை.
காணொளி வழியிலும்
வளைத்தெடுத்து
காண்போரையும் இழுத்தெடுப்பதில்
நாங்கள் கை தேர்ந்த பிள்ளை.
கையும் பையும் கணமாக இருந்தால்.

எதையும் மறந்து கை கோர்த்து
நடந்திடுவோம்.ஓட்டைச் 
சைக்கிளுக்கு டாட்டா காட்டிடுவோம்.
மோட்டார் பைக்கிக்கு 
வாய் வாய் சொல்லிடுவோம்.

கார் காரனுக்கு கண் அடித்திடுவோம்.
ஏறப் பிலேன் ஏறிட
 எண்ணம் விதைத்திடுவோம்.

அயல் நாட்டு உழைப்பாளியின்
தொடர்வு கிடைத்து விட்டால் .
காலம் நேரம் பார்க்காமல்
அரட்டை அடித்திடுவோம்.

ஒருவரை ஒருவர்
காட்டியும்  கொடுத்திடாமல்
எவரிடமும் போட்டும் கொடுத்திடாமல் .
இவ் விசயத்தில் உடன் பிறப்பாகிய 
இருவரும் பிளவு இன்றி
ஒற்றுமையாய் இருந்திடுவோம்.

இளிச்சவாய் எவனாவது 
பார்த்துப் பழகி விட்டால்  .
காதல் கீதல்  என்று  கதை கூறிடுவோம்
தேவையானதை வாங்கிச் சுரண்டி 
பையை நிறப்பிட முயன்றிடுவோம்.
தேவை முடிந்து விட்டால் 
கோளையாக மாற்றி 
ஆளை முடித்திடுவோம்.


Post a Comment

1 Comments