
சி ந்திய சிவப்பு
நிறம்மாறும் முன்னர்
தண்டனையிலிருந்து
தப்பித்திருக்கும் குற்றங்கள்.
து ளிர்த்தது விதை
ஆகாயத்தின் கருவறையில்
சூலுற்றது நீர்.
ச கதியில் விழுந்தாலும்
நிலத்தை உயிர்ப்பிக்கிறது
பறவையின் எச்சம்.
ப ல மைல்களுக்கப்பாலிருந்து
மலைகளையும் வனங்களையும்
கடந்து வந்த நதி வலியறியாமல்
கடந்து கொண்டிருக்கிறது
என் ஊரையும்.
யா னையைச் சாய்க்கும்
சாய்த்த யானையை
இழுக்கும்.
அத்தனையும் சாத்தியமாகும்
ஓர் எறும்பு நினைத்தால்!

0 Comments