Ticker

6/recent/ticker-posts

வாழ்க்கை என்பது மழைத்துளியின் ஆரம்பம் வரை...!



எத்தனை மௌனங்களை 
இடிகளாய் ஏற்பது
எத்தனை இன்னல்களை 
மின்னல்களாய் ஏற்பது
மேகம் விலகுமென 
நீண்டநேரமாக நிலவிற்கு 
காத்திருக்கிறது மண்ணில் 
வாழ் குழந்தை.....!

மாடியிலிருந்து வானை 
கீற முயன்ற கல் காற்றை 
கிழித்த திருப்தியில் 
பூமியை அடைந்தது.....!

காற்றை கிழித்து விழுந்த 
கல் குழுந்தைகளுக்கு ஆற்றில் 
கோலம் வரையும் 
புள்ளிகள் ஆகிவிட்டன....!

ஆற்றில் உருவான வளைய 
கோலம் அடுத்த கரையை 
தொடும் முன் முற்று பெறுகிறது, 
சிறு மீன் துள்ளி மீண்டும் 
உருவாக்கிய இன்ப 
வளையத்திற்கு முன்....!

மீனின் துள்ளலும், ஆற்றின் 
கரையோர சிறுவர்களின் 
ஒன்றாகவே மூழ்குகின்றன, 
மொத்தமாக உலகை 
நகர்த்தும் ஆற்றின் நீரோட்டத்தில்.....!

ஓடும் ஆற்று நீரின் உச்சபட்ச 
தேவை என்னவென்றால்
அதன் வாழ்க்கை என்பது 
மழைத்துளியின் ஆரம்பம் வரை 
என்பதில் எந்த மாற்றமும் இல்லை.........!








Post a Comment

0 Comments