Ticker

6/recent/ticker-posts

Ad Code



சிலம்புக்குறள்-3


இந்திரவிழா
இந்திரன் கோயிலில் நட்டார் நெடுங்கொடியை!
விண்தொடு மாறுதான் பார்.

விழாக்கோலம் உற்சாகம் வீதியெங்கும் கண்ணே!
உலாக்கோலம் அங்கங்கே தான்.

எண்பேரா யத்தாரும் அய்ம்பெரும்
நற்குழுப்
பண்பாளர் சேர்ந்துவந்தார் அங்கு.

அரசாளும் மன்னரை வாழ்த்தினார் நின்று!
உலகம் வியந்தது கண்டு.

கடலாடு காதை
கண்ணகி நல்லாள் இடக்கண்ணும் மாதவியின்
தண்வலக் கண்ணும் துடித்து

வரப்போகும்  இன்பத்தைத்  துன்பத்தைக்  கூறி
வருமுன் உரைத்ததாம் அங்கு.

விஞ்சையன் வருகை
விஞ்சையன் காதலிக்கு ஊர்காட்டிக் கூறுகின்றான்
இந்ர விழாவைக் குறித்து.

அகத்தியர் சாபத்தால் ஊர்வசி இங்கே
புகாரிலே மாதவியாய் வந்து

பிறந்தாளாம் மண்ணில் கணிகைக் குலத்தில்!
நடனத்தைக் காண்போம் வா!
கொடுகொட்டி,பாண்டரங்கக் கூத்து வகையை
அடுத்தடுத்து பார்ப்போம் நாம்.

அல்லியத் தொகுதியுடன் மல்லாடல் கூத்துடன்
துய்ப்பாய்த் துடிகொட்டிக் கூத்து.

குடைக்கூத்தும் ஆடும் குடக்கூத்தும் பேடி
இடைக்கூத்து பார்ப்பாய் ரசித்து.

மரக்காலும், பாவை,கடையக்கூத் துந்தான்
தரமாகக் காண்போம் வியந்து.

மாதவியின் அழகு!
வண்ண அணிகலன்கள் பேரழகா? மாதவியின்
பொன்மேனி பேரழகா என்று

கண்மயக்கம் கொள்ளுமாறு மாதவி தன்னைத்தான்
அங்கங் கழகுசெய்தாள் காண்.

கானல்வரி
ஆடவர் தப்புகளை ஆரணங்கின் கற்புவாழ்க்கை
நாடறியக் காக்கிறதே என்று

காவிரியை எண்ணித்தான் பாடினான் கோவலன்!
 பூமனதில் ஊடினாள் மாது.

பெண்ணின் பெருமை ஒழுக்கத்தைப் போற்றுகின்ற
நன்னெறி ஆண்களால் தான்,

சோழன் நெறிமாறா நல்லொழுக்கத் தால்தான்
காவேரி பூரித்தாள் சொல்.

மாதவியின் இப்பாடல் கோவலனின் உள்ளத்தில் 
ஊடலைத் தூண்டிய( து) அங்கு.

மாதவியும் கோவலனும் மாறுபட்டே எண்ணியதால் 
ஊடலுடன் வேறுபட்டார் நின்று.

இருவரும் வெவ்வேறு திக்கில்  பயணம்!
இருவரும் பிரிந்தனர் சென்று.

மதுரை நோக்கி
மாதவி தன்னில்லம் சென்றாள்!
கோவலனைப்
பார்க்கத் தவித்தாள் தனித்து.

மேல்நிலை மாடத்தைச் சேர்ந்தவள் யாழெடுத்தாள்!
வாய்ப்பாட்டுப் பாடினாள் அங்கு.

முடிக்கும் பொழுதோ பிரிவுத் துயரால்
துடித்தது பாடல் முடிவு.

தாழம்பூ  வெள்ளி இதழிலே தீட்டினாள்
கோவலனை நாடி மடல்.

தோழியிடம் தந்தனுப்பி கோவலனை இங்கழைத்து
வாவென்றாள்! அன்பால் பணித்து.

மடலைத் தந்ததும் கோவலன் ஏற்க
மறுத்தான் நடித்தாளே என்று.

நடிப்புக் கலைகூறும் எட்டுவரி சொல்லி
நடித்தாளே என்றான் சினந்து.

மடலளித்தேன்! ஏற்க மறுத்தான் !
முகம்குனிந்தாள் தோழி தவித்து.

மாதவி மனம்
இருந்தாலும் கோவலன் வந்திடுவான் காலைப்
பொழுதிலென்றே ஏங்கினாள் மாது.

தேவந்தியின் வேண்டுதல்
அச்சாத்தன் கோயிலில் தேவந்தி கண்ணகியின்
வற்றாத் துயர்தனைப் போக்கு,

என்றேதான் வேண்டினாள்! கண்ணகி இல்லம்போய்
உன்துயரம் பொகுமென்றாள் பார்த்து.

(தொடரும்)



Email;vettai007@yahoo.com


Post a Comment

0 Comments