நகரப் பகுதியில் கோழி வளர்ப்பதால் அதிக அளவிலானோர் ஆர்வமாக வாங்குகின்றனர். இதனால் விற்பனை முறை சுலபமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது- இளைஞர்
தஞ்சை நகரில் உள்ள ஆசிரியர் காலணியில் வசித்து வருபவர் அன்பழகன். டிப்ளமோ வில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்த படிப்பிற்கான வேலை கிடைக்காததால் என்ன செய்வது என்ற ஆலோசனையில் இருந்துள்ளார்.அப்போது தான் இவரின் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வீட்டு தேவைக்காக குறைந்த அளவிலான கோழிகளை வளர்த்து வந்துள்ளனர். இதை பார்த்த இவர் இதையே நாம் கொஞ்சம் பெரிய அளவில் செய்தால் சக்ஸஸ் ஆகும் போலயே என்று எண்ணி உள்ளார்.
இது குறித்து வேளாண்மைத் துறையில் வேலை பார்த்து பொது ஓய்வு பெற்றுள்ள இவரது அப்பாவிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஏன் பா படிச்சிட்டு கோழி வளர்க்க போறியா? அதும் இல்லாம நம்ம நகரப் பகுதியில் இருக்கோம் இது எப்படிப்பா சாத்தியமாகும் என்று இவர் அப்பா கூறவே, அதான் நம்ம வீட்டு பக்கத்திலேயே 2400 சதுர அடியில் இடம் இருக்கே பா, இடத்தை சுற்றிலும் தென்னை மரம், இருக்கு அதற்கான சூழலும் தான் அமைஞ்சிருக்கே ட்ரை பண்ணி பார்க்கலாம்பா என்று கூறியுள்ளார். பின்னர் அப்பாவின் ஒத்துழைப்பால் கடந்த 2018-ம் ஆண்டு நாட்டு கோழி வளர்ப்பை தொடங்கியுள்ளார்.
அப்பா கொடுத்த பணத்தில் கோழி வளர்பதற்கான சூழலை ஏற்படுத்த கொட்டகை அமைத்து சிறுவிடை பெருவிடை ரகங்களை சேர்ந்த 40 தாய் கோழி மற்றும் குஞ்சுகளை மட்டும் வாங்கி வாங்கி வளர்த்தார். தற்போது இவரிடம் 250 கோழிகள் உள்ளது. நகரப் பகுதியில் கோழி வளர்ப்பதால் அதிக அளவிலானோர் ஆர்வமாக வாங்குகின்றனர். இதனால் விற்பனை முறை சுலபமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது.
நகர பகுதியில் கோழி வளர்ப்பு: நகரப் பகுதியில் கோழி வளர்ப்பதால் அதிக அளவிலானோர் ஆர்வமாக வாங்குகின்றனர். இதனால் விற்பனை முறை சுலபமாகவும் அதிக அளவிலும் நடக்கிறது.கிராமத்தில் விவசாயம்:-தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள காசவள நாடு தெற்கு பகுதியில் உள்ள இவரது விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருகிறார். அதிலிருந்து கிடைக்கும் தரமற்ற நெல் கதிர்களை கோழிக்கு தீவனமாக தருகிறார்.
நிறைவான லாபம்:-கோழிகளை விற்பதற்காக தஞ்சை நகரில் உள்ள பல பகுதிகளிலும் முக்கியமாக அதிகாரிகள் வசிக்கும் பகுதிகளிலும் நேரடியாக இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் தஞ்சை மக்கள் பலர் இவரிடம் கோழிகளை வாங்குகின்றனர். இவரின் கோழி தரமாக இருப்பதால் நகரின் பலர் இவரிடம் நேரடியாக கோழிகளை வாங்கி வருகின்றனர். இதன் மூலம் மாதம் 60 ஆயிரம் வரை லாபம் ஈட்டி வருகிறார்.
இது குறித்து பேசிய இளைஞர், ஆரம்பத்தில் நான் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்ட போது ஒரு சிலர் என்னிடம் நகரத்தில் எப்படிப்பா இது சாத்தியமாகும் வேறு ஏதாவது பண்ணலாமே என்று தெரிவித்தனர் ஆனால் தற்போது என்னிடம் தஞ்சை மட்டும் இல்லாமல் பக்கத்து மாவட்டத்திலிருந்து கூட பலர் கோழிகளை வாங்கி செல்கின்றனர்.
என் அப்பாவின் உறுதுணையால் நான் தொடங்கிய இந்த நாட்டு கோழி வளர்ப்பு நல்லா போயிட்டு இருக்கு, தொடக்கத்தில் இது சரிப்பட்டு வராது என்று சொன்ன ஒரு சிலர் தற்போது என்னிடம் நாட்டுக்கோழி வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொள்வது எப்படி என்று ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பகுதியிலேயே கடை ஒன்று அமைத்து நாட்டுக்கோழி விற்பனையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதை எனது முக்கிய நோக்கமாக இருக்கிறது என்று இளைஞர் தெரிவித்தார்.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments