Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-45


வழமைபோல் செரோக்கி வனத்துக் செல்வதும் எச்சங்களையும் மூலிகையும் திரட்டி வருவதும், அங்கிருந்து வந்ததும் தாய் சமைத்து வைத்திருக்கும் உணவை உண்டுவிட்டு வேலைக்குச் செல்வதுமாக அவனது வாழ்க்கை கடந்து கொண்டிருந்தது!

திடீரென ஒருநாள் அவன் வேலைக்குச் செல்லும்போது,  இர்வின் தனது தந்தை அன்பளிப்புச் செய்த இரு சக்கர சக்தியூர்தியில் மரவேரடிக்கு வந்து செரோக்கியின்  வரவுக்காகக் காத்திருந்தான்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். வேலை பற்றியும் ரெங்க்மா பற்றியும் விசாரித்த இர்வின் நாளைக்கு அதிகாலையில் ரெங்க்மாவையும் அழைத்துக் கொண்டு கட்டாயம் மரவேரடிக்கு வந்து விடும்படி கூறினான். அப்போதுதான் செரோக்கிக்கு இர்வினின் “ஒப்படை வைபவம்” நினைவுக்கு வந்தது!

அதிகாலை சூரியன் உதிக்கின்ற வேளை மரவேரடிக்கு வரும் ஊர்தியில் ஏறி வரும்படியும், அணிய வேண்டிய ஆடை அணிகளை வேறாக எடுத்து வரும்படியும் கூறினான்.

அடுத்தநாள் அதிகாலை ஊர்தியின் வரவுக்காக செரோக்கியும் ரெங்க்மாவும் அவர்கள் வாங்கி வைத்திருந்த துணிப்பொதிகளோடு மரவேரடியில் காத்து நின்றனர்.  

குறிப்பிட்ட நேரத்தில் ஊர்தி  வந்து நின்றது. அதன் 
கதவுகள் தானாகத் திறந்து கொள்ள, அவர்கள் ஏறிக் கொண்டனர்!  

மனாஸ் நகர வீதியில் காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த ஊர்தி  பறந்து கொண்டிருந்தது!

முதன் முதலாகக் சொகுசு ஊர்தியொன்றில் பயணம் செய்கின்ற ரெங்க்மா மகிழ்ச்சியில் களித்துப் போயிருந்தாள்  என்பதை அவளது முகம் வெளிக் காட்டியது.  நகர வீதிகளின் இரு மருங்குகளையும் ஆசையோடு மாறிமாறிப் பார்த்து ரசித்துக் கொண்டு வந்தாள் ரெங்க்மா. செரோக்கி வேலை  செய்யுமிடம் கழிந்து  கார் தொடர்ந்து விரைந்து கொண்டிருந்ததது!

உயரமாகத் தெரிந்த பல்கலைக் கழகத்தின் நுழைவாயிலைக் கண்டதும், தாம் வந்து விட்டதை உணர்ந்தான் செரோக்கி. கட்டடங்கள் பலவற்றைத் தாண்டி, கலாமண்டப அரங்கின் தரிப்பிடத்தில் ஊர்தி நிறுத்தப்பட்டதும் இருவரும் இறங்கிக் கொண்டனர்.

சாரதி அவர்களை அழைத்துச் சென்று அரங்கின் நுழைவாயிலில் வரவேற்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரிடம் கையளித்ததும்  இருவரும் மரியாதையாக அழைத்துச் செல்லப்பட்டு  ஒர் அறையில் விடப்பட்டனர்.

அங்கு இவர்கள் துணிமணிகளை  மாற்றிக் கொண்டதோடு ஒப்பனைகள் செய்யப்பட்டு, மரியாதையாக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

(தொடரும்)

செம்மைத்துளியான்




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments