குறள் 568
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
ஒரு அரசு கூட்டாளிங்ககிட்ட எதுவும் கலந்து பேசாம, கோவத்தோடு முடிவெடுத்துப்புட்டு, சிக்கல் வரும்போது அவங்ககிட்ட கோவப் பட்டா, அந்த அரசோட புகழ் மங்கும்.
குறள் 569
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
முன்னக்கூட்டியே எச்சரிக்கையா இருந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளத் தெரியாத அரசன், நெருக்கடி வரும்போது பயத்துனால கவிழ்ந்துருவான்.
குறள் 570
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
கடுங்கோல் ஆட்சியில, தலைவரு படிக்காத முட்டாப்பயலுவொள தனக்கு ஆதரவா வச்சுக்கிடுவாரு. இந்த மண்ணுக்கு அதைக்காட்டிலும் சுமையானது வேற எதுவும் இல்லை.
குறள் 571
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
பார்த்து நல்லது கெட்டது தெரிஞ்சு கொள்ளக்கூட பக்குவம் உள்ள ஆளுங்க இருப்பதுனாலத் தான், இந்த உலகம் ஓடிக்கிட்டு இருக்கு.
குறள் 572
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
மக்கள் கிட்ட எதையும் பார்த்து தெரிஞ்சுக்கிடுத பக்குவம் இருக்கதால தான் இந்த ஒலகம் இயங்குது. இதுக்கு மாறா இருக்கவங்க இந்த மண்ணுக்கு சுமையானவங்க.
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments