மனதை விட்டு நீங்காத
நினைவுகள்
மலர்ந்து கொண்டே
இருக்கும் நிகழ்வுகள்
மண்ணைக்
கிண்டி விளையாடிதும்
மரத்தில்
குரங்காய்த் தாவியதும்
மணியோடு பெட்டகத்தில்
ஒழித்துப் பிடித்ததும்
மறக்கத்தான் முடியுமா
இனிமைக் காலத்தை
மனதிலே பச்சை குத்தியது
போன்று நினைவுளே மிச்சம்
மல்லுக்கட்டும் நண்பர்கள்
எல்லாம் என்னை
விட்டுப் போன பின்னே
மணல் வீட்டுத்
திண்ணையும் இல்லை
மறக்கப் பட்டுப் போச்சு
சிறக்கப் பட்ட விளையாட்டு
திறக்கப் பட்டுவிட்டது
தொலைபேசி கேம்ஸ்ஸி
அதை நிற்பாட்டு
சொன்னாலும் புரியாது
இனிமேலும் அறியாது
நிகழ்கால எதிர்கால
சந்ததிகளின் வாரிசுகளுக்கு
ஆர் எஸ் கலா
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments