370. வினா:நம்மை அழவைத்துச் செல்வது எது?
விடை:பிறரை அழச் செய்து பெற்ற செல்வம்
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை.
(650)
371. வினா:ஊழலில் வரும் பொருளைக் காப்பது எதைப் போன்றது?
விடை:பச்சை மண் குடத்தில் நீர் ஊற்றி காப்பது போன்றது
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.(660)
372. வினா :செயல் உறுதி என்பது எது?
விடை:மன உறுதி
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற.
(661)
373. வினா:மிகவும் எளிதானது எது?
விடை:சொல்லுதல்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
(664)
374. வினா; அரிதானது எது?
விடை: சொல்லியபடி செய்து முடிப்பது
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.
(664)
(தொடரும்)
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments