Ticker

6/recent/ticker-posts

இறால் பிரியாணி!


தேவையானவை
தேவைக்கு ஏற்ப
பிரியாணி அரிசி.
பெரிய இறால்
முட்டை
ஏலக்காய்
பட்டை
இளவம் பூ
ரம்பை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
கரம் மசாலா தூள்
மல்லி இலை
புதினா இலை
சிறாய்
இஞ்சி  பூண்டு விழுது
பெரிய வெங்காயம்
தக்காளி
தேங்காப் பால் முதல் பால் ஒரு கப்
உப்பு  பிரியாணி பவுடர்
நெய் தயிர்
எண்ணெய்
எலுமிச்சம் பழம்
சின்ன வெங்காயம்
(இவை அனைத்தும் உங்கள் விருப்பம்)
செய் முறை மட்டும் நான் தருகிறேன்

இறால் தலை மாத்திரம் நீக்கி அழுக்கை எடுத்து கழுவியதும்
எலுமிச்சம்  சார் 'மஞ்சள் தூள் உப்பு சேர்த்து ஊற விடவும்.

இறால் தலைகளை நன்றாகக் கழுவி அதனுடன் மஞ்சள் சீரகம் கறிவேப்பிலை போட்டு போதிய அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும் 

கொதித்து தலை அவிந்த பின் நீரை மாத்திரம் வடி கட்டி எடுத்து விட்டு தலையை வீசி விடவும்.

சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது தக்காளி இவைகளோடு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்  .

பெரிய வெங்காயத்தில் இரண்டை கீறுகீறாக வெட்டி பொரித்து எடுத்துக் கொள்ளவும் 

அடுப்பில் பாத்திரத்தை வைத்து நெய் விட்டு  அதில் ஒரு வெங்காயம் மாத்திரம் நறுக்கிப் போட்டு வதக்கிக் கொள்ளவும்

வதங்கிய பின்  வடிகட்டிய நீரை ஊற்றி பிரியாணி பவுடர் உப்பு  தயிர் போட்டு கொதி வந்ததும் அரிசியை போடவும் அரிசி பாதி வரை மாத்திரமே அவிந்திருக்க வேண்டும்.

வேறு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் எண்ணெய்  சம அளவு ஊற்றி சூடானதும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி விட்டு நீர் தேவைக்கு ஏற்ப ஊற்றி அதில் உப்பு மஞ்சள் மிளகாய் பட்டை ஏலக்காய்  பட்டை பூ சிறாய் சேர்த்து கொதிக்க விடவும்

வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இறாலை பாதி வேக்காடு பொரித்து எடுத்து நேராவே கொதிக்கும் குழம்பில் போடவும் கொழம்பு வற்றும் போது பால் விட்டு கெட்டியானதும் மல்லி புதினா சேர்த்துக் கொள்ளவும் 

சோறு இருக்கும் பாத்திரத்தில் நடுவே குழி போட்டு அதில் முட்டையையும் போட்டுஇறால் கறியை கொட்டவும் 

பின்னர் மேல் புறமாக சோற்றை பரப்பி மூடி விட்டு அதன் மேலே கரமசாலா மல்லி புதினா ரம்பை பொரித்த வெங்காயம் இவைகளை தூவி மூடி விடவும்

 அடுப்பை மெதுவாக வைத்து 15 நிமிடம்  சென்று இறக்கி கிளறி விட்டு தட்டையான பாத்திரத்தில் கொட்டி பறிமாறவும் 

அப்போதுதான்  அனைத்தும் ஒன்றாக கலந்து சுவையாக இருக்கும்.














Post a Comment

0 Comments