ஹலாளுக்கும்.அரபு நாடுகளுக்கும் எதிராக போராடிய ஹீரோவின் உண்மை முகம் .....! -வீடியோ

ஹலாளுக்கும்.அரபு நாடுகளுக்கும் எதிராக போராடிய ஹீரோவின் உண்மை முகம் .....! -வீடியோ

ஹலாளுக்கு எதிராகவும் இஸ்லாமியசட்டங்களுக்கு எதிராகவும்,மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் அரபு நாடுகளுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட்டு முஸ்லிகளுக்கு எதிராக பெரும்பான்மையின மக்களை இனவாத ரீதியில் திருப்பிவிட்ட ஞானசார தேரர் அரபிகளுடன் சேர்ந்து ஹலால் உணவு சாப்பிடுகின்றார். 

அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே இனவாதத்தை தூண்டியவர்களில் முன்னணியில் இருந்தவர் இந்த ஞானசார தேரர்.இவருடைய இனவாதக் கருத்துக்களால் அமைதியாக இருந்த நாடு இன்று சுடுகாடாய் மாறிவிட்டது.
இவருடைய இனவாதத் தூண்டுதல்தான் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது.முஸ்லிகளின் சொத்துக்களை சூறையாடி ,கொலை செய்யப்பட்டு,அவமானப் பட்டு சுதந்திரமில்லாத ஒரு நாட்டில் வாழ்வதைப் போல் முஸ்லிம்கள் மக்கள் இன்று  தலை குனிந்து வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் அரபிகளுடன் அமர்ந்து ஹலால் உணவை ருசிக்கின்ற இந்த ஞானசாரவை என்னவென்று சொல்வது?

பொருளாதார வீழ்ச்சிக்குப்பிறகு உலகெங்கும் கையேந்திச் சென்ற இலங்கை அரசாங்கம் வெறும் கையோடு திரும்பிய நிலையில்  கடைசியில் அரபிகளிடம் தஞ்சமடைந்திருப்பது 
வரவேற்கத்தக்கது.ஏனென்றால் அரபு நாடுகள் உதவி செய்வது மக்களின் கஷ்டத்தை தீர்ப்பதற்காக மட்டுமே.
வட்டியை எதிர்பார்க்காமல்,ஒருநாட்டின் பலவீனத்தை சாதகமாய் பயன்படுத்தி ஆக்கிரமிக்கும் நோக்கமில்லாமல் உதவி புரிகின்றவர்கள் அரபிகள்.

இலங்கையர்களுக்கு உடனடியாக தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் ஜாதி மதம் பார்க்காமல்  உலகத்தில் முதலிடம் வகிப்பவர்கள் அரபிகள் மட்டும்தான் என்றால் அது மிகையாகாது.

இலங்கையர்களுக்கு மட்டுமில்லாமல் உலகத்தில் பொருளாதார சிக்கலில் தவிக்கின்ற அணைத்து நாடுகளுக்கும் மனிதாபிமான அடிப்படையில்  உதவி செய்கின்றார்கள்.

அரபு நாடுகள் பெருமையடிப்பதில்லை ,புகழுக்காக உதவிகள் செய்வதில்லை.இதை நாம் இப்போதாவது புரிந்துகொண்டால் சரிதான்.

இவர்களைவிட்டால் வேறு யார்தான் தொழில் கொடுப்பார்கள்?

அரபு நாடுகளை பகைத்தது மிகப் பெரிய இழப்பு என்று கடைசியில் புரிந்துகொண்டுள்ளதை வரவேற்கின்றோம். 
மாஸ்டர் 

மேலும்...தமிழ்நாடு செய்திகள் 
மேலும்...இலங்கை  செய்திகள் 
மேலும்...இந்தியா  செய்திகள் 
மேலும்...உலக  செய்திகள் 
மேலும்..விளையாட்டு செய்திகள் 

Post a Comment

Previous Post Next Post