ரெஸ்டோரண்டை விட்டும் வெளியே வந்ததும், அங்கிருந்த அடர்ந்த பூங்காவனத்தினுள்ளிருந்த கல்நாட்காளிகளில் மூவரும் அமர்ந்துகொண்டதும், செரோக்கி மெதுவாக்காப் பேச்சைத் தொடங்கினான்.
ரெங்மாவுக்கு 'செக்கொவ்' பிறக்கப்போகும் செய்தியைக் குறிப்பிட்டதும் மகிழ்ச்சியடைந்த இர்வின், செரோக்கியை ஆறத்தழுவிக்கொண்டான்!
பொதுவாகப் பெண்மைக்குள்ளிருக்கும் வெட்க சுபாவம் ரெங்க்மாவுக்குள்ளும் எற்பட, அவள் தன் இரு கரங்களாலும் முகம் மறைக்க முற்பட்டாள்!
'செக்கொவ்' பற்றி எப்போதோ ஒருநாள் செரோக்கி தன்னிடம் குறிப்பிட்டது இர்வினுக்கு நினைவுக்கு வந்தது!
"அதெப்படி பிறக்கப்போவது ஆண்மகன்தான் என்று உன்னால் உறுதியாகக் கூற முடிகின்றது?" இர்வின் கேட்டான்.
வனவாசிகள் சமூகத்தின் மூதாட்டிகன் ஒன்றுசேர்ந்து ஓலை கிழித்துப்பார்த்தில், ஆண் குழந்தை பிறக்கப்போவது
உறுதியானது என்ற விடயத்தை செரோக்கி காம்பீரமாகக் குறிப்பிட்டபோது, இவர்களது
அறியாமையை நினைத்து இர்வின் மனதுக்குள் கவலைப்பட்டுக் கொண்டபோதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது, முகமலர்ந்து மகிச்சியைத் தெரிவித்ததும், செரோக்கியும் ரெங்க்மாவும் இர்வினிடமிருந்து விடைபெற்றுக்கொண்டனர்!
'மனாஸ்' வீதியில் நடந்து சென்ற அவர்கள், சில பல துணிக்கடைகளுக்குள் எறி இறங்கி, தம்மிடமிருந்த நாணயத்தாள்களைக் கொண்டு, ரெங்க்மாவுக்குப் பிடித்தவற்றை வாங்கிக்கொண்டனர்.
நகரத்துக்குள் வருகின்றபோதெல்லாம் எப்போதுமே செரோக்கி தனது சமூகத்தையும், நகரவாழ் மக்களையும் ஒப்பிட்டு நோக்குவது அவனுக்குப் பழகிப்போய்விட்டது!
மகிழ்ச்சிகரமான இந்த வாழ்க்கை முறைக்கு தமது 'சமூகத்தை மாற்றுவதெப்படி' என்பதில் அவனது எண்ணம் எப்போதுமே சுழன்று கொண்டிருக்கும்.
ஆசை அசையாகத் தான் வாங்கியிருப்பவற்றைத் தனது சமூகத்தின் முன் எவ்வாறு, எப்படி ரெங்க்மாவுக்கு அணிவிப்பது?
தனக்கும் நகரத்துக்குமிடையில் இருக்கின்ற தொடர்பை அவர்கள் அறிந்து கொண்டால் என்னாவது?
அறிவூட்டலில் தொடங்கப்போகும் தன் சமூக மாற்றத்தை, இன்னும் ஒருபடி மேற்சென்று தற்போதிருக்கும் பண்டமாற்றைப் பணமாற்று முறைக்கு மாற்றியமைப்பதால் நிலைமை சீராகிவிடும் என்பதை நினைத்து அவன் ஒருவகையில் புலங்காகிதமடைந்தான்.
'மனாஸ்' நகர வீதியில் நடந்துவந்த அவர்கள், மரவேரடிக்கு வந்ததும் வனவாசிகளாகத் தம்னை மாற்றிக்கொண்டு, கானகம் நோக்கிச் செல்லலாயினர்!
(தொடரும்)
மேலும்.....தொடர் கதைகள் படிக்கவும்