வரங்களாகும் வாய்ப்புகள்
மனித குலம் சிறக்க. மனித வாழ்வு தழைக்க, வாழ்வில் நலங்கள் பல பெருக அடிப்படைத் தேவை நல்லெண்ணங்களே. அதிலும் நேர்மறை எண்ணங்களே நம்மை வடிவமைக்கும் நம்மை செதுக்கும். இதனைக் கூறும்போது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவப் பேராசான் கூறிய கருத்து எம் நினைவில் தோன்றுகிறது. ஆம்
மேலும்..... செந்தமிழ் இலக்கியம் படிக்கவும்
“எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. (குறள் - 655) என்பதன் மூலம்,
“என்ன தவறு செய்துவிட்டோம்” என நினைத்துக் கவலைப்படத்தக்க செயலைச் செய்யக்கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்துவிட்டால், அச்செயல் மீண்டும் செய்யாது இருப்பது நல்லது... என்கிறார். மனத்தூய்மை, மன உறுதி, மனத் தெளிவு இவைதனை முதலீடாக்கி நல்லெண்ணத்தை விதையாக்கிச் செயல்பட்டால் நாம் நினைத்ததை அறுவடைசெய்யலாம். இதுதானே வாழ்க்கைத் தத்துவம்.
நம் வாழ்க்கைப் பாதையில் இறையாற்றல் நமக்குப் பல வாய்ப்புகளை வாரி வழங்குகிறது. அதுவே இயற்கையாகும். அது நமக்கு இயற்கை வழங்கும் வரங்களாகும். ஏனோ நாம்தான் அதைச் சரியாகப் பார்க்க மறந்துவிடுகிறோம் அல்லது மறுத்துவிடுகிறோம். நமக்குரியது நம்மைத் தேடி வரும் வாய்ப்பாக... ஆம்.
இதைச் சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு மீனவன் மீன்பிடிக்க அதிகாலை கிளம்பிச் செல்கின்றான். அவன் விடியுமுன்னே ஆற்றங்கரைக்குச் சென்றுவிட்டதால் வெளிச்சம் வரும்வரை ஆற்றங்கரையில் அமர்ந்து இருந்தான். அவன் அமர்ந்த இடத்தில்
காலாட்டிக் கொண்டிருக்கும் போது அவன் காலடியில் ஏதோ ஒரு மூட்டை தட்டுப்படுகின்றது. அதை அவன் தொட்டுப்பார்க்க அம்மூட்டையில் சிறுகற்கள் இருப்பதை உணர்ந்தான்.
சரி இருள் கலைந்து ஒளி வரும்வரை எதையாவது செய்து கொண்டிருக்கலாம் என்றெண்ணிய மீனவன் அக்கற்களை எடுத்து ஒவ்வொன்றாக ஆற்றில் வேகமாக வீசி எறிந்தான். அதுவும் நடு ஆற்றில் தொப்... தொப்... என்று விழுந்து கிளங், கிளங் என்ற சத்தம் வந்து கொண்டிருந்தது. பொழுதும் கரைய விடியல் வந்து கொண்டிருந்தது. வெளிச்சம் வர, வெளிச்சத்தில் அவன் தான் கையில் இருந்த ஒரு சில கற்களைப் பார்த்தான்.
மீதமுள்ளவற்றைக் கண்ட மீனவன் பேரதிர்ச்சிக்கு உள்ளானான். ஆமாம். அவன் அதிர்ச்சிக்குக் காரணம் அவன் கையில் இருந்த கற்கள் வைர, வைடூரிய, மாணிக்கக் கற்களாகும். ஐயகோ ! நான் இதுவரை இருளில் ஆற்றில் வீசி எறிந்தவை வைரக்கற்களா? எவ்வளவு பெரிய பொக்கிஷம் ! புதையல் இறைவன் எனக்கு வழங்கினான். ஆனால் அதை நான் சரிவர அறியாமல் என் அவசரத்தினால் இழந்துவிட்டேனே எனப் புலம்பினான். இயற்கை தந்த வாய்ப்பு, வரம், புதையலாக. ஆனால், அவனாக அதை இழந்துவிட்டான்.
ஆயினும் ஏதோ அவனது நல்ல நேரம் அதிர்ஷ்டம் ஒரு சில கற்களாவது அவனுக்குக் கிடைத்தன. ஆகவே அவசரத்தால் தவறான முடிவு எடுக்காமல், சரியான முடிவை எடுத்து அதை அடையும் வரை உண்மை, உறுதி, உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நம் பாதை வெற்றிப் பாதையாக அமையும். அதில் நம் பயணம் தொடரும் வாய்ப்புகள் இறைவன் நமக்குக் கொடுத்த வரங்களாகும். அதைப் பயன்படுத்தி நாமனைவரும் நலம் பெற்று நீடுழி வளமுடன் வாழ்வோம்.

(தொடரும்)
Tags:
செந்தமிழ் இலக்கியம்