அடர்வன மாயை...!

அடர்வன மாயை...!


புறக்கணிப்பின்
பிரதிபலிப்பு
துல்லியமாகத் தெரியும்
அடிக்கோடிட்ட எழுத்துக்களாய்...
உற்று நோக்கி
உணர்விழந்து
உயிரின் ஆகாயத்தில்
ஒன்றுமில்லாத
அருவமாய் பறந்து...
புரிவதே இல்லை
எப்போதும்
பொருண்மை...
பொருந்தாத பொழுதுகள்
பேருண்மைகள் பலவற்றை
சிறைபட்ட கிளியின்
சீட்டுகளைப்போல்
மனவெளியில் எடுத்தெடுத்துப்போடும்...
காரணங்கள் கொஞ்சம் சொல்லிச் செல்!
காரணங்கள் கொஞ்சம்
சொல்லிச் செய்!
வெம்மையின்
வேண்டாமையின்
வேதங்கள்
என்னவென்று தெரியாமலே
எத்தனையோ
அகால மரணங்களைக் கடந்து
புனர் ஜென்மங்களை
எடுக்கின்றது உள்ளம்...

மீள் வருதலில்
மீண்டு வந்து
கிளையமர்தலில்...
மனம் கொத்தி
கோடை துரத்தி
மழை பெய்கையில்...
அடர்வன மாயை
அகன்று
வசந்தம் விரிந்து
பூப்பெய்துகையில்....

உன்னைப் போல
எல்லாம் மறந்து விடுவதில்லை
எனக்கு.

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை

மேலும்.....  கவிதைகள் படிக்கவும் 


 


Post a Comment

Previous Post Next Post