
இதயத்தில் ஊசியாக
ஊடுருவுகிறது
வலி
அவ்வளவு கூர்மையானதா
ஒரு வார்த்தை?
அல்லது
எனது பலவீனத்தின்
வெளிப்பாடா?
எளிதாகக் கடந்து
போயிருக்கலாமா?
கடினமாக மாறுவதற்கு
மனம் காரணமா?
யாரோவுடையதாக இருந்தால்
விலகிப் போயிருக்கலாம்
அந்த வார்த்தை
மீசை அரும்பிய
என் வாரிசுனுடையதல்லவா?
உண்ணும் உணவின்
அளவில்
வேறுபாடு தெரிந்தது
தொலைவில் நின்று
பரிகசித்தது
தூக்கம்
சுமந்து திரிவதை விட
வலியின் எடையை
இறக்கி வைத்து விட எண்ணி
அவன் முகம் நோக்கி
ஒரு புன்னகையை
வீசினேன் ...
பிள்ளையிடம் தோற்றுப்போவது
பெருங்குற்றமல்ல
வாழ்வில் வெற்றிக்கான
இன்னொரு பாதை என்கிறது
எனக்காக அனுபவம்...
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்...

3 Comments
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteஎனது கவிதை இந்த இதழில் வெளி வந்திருக்கிறது...
அழகாக மெருகேறி வரும்
உங்கள் கனவு இதழில்
எனக்கு
நீங்கள் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு
இதயம் நிறைந்த நன்றிகள் ..
ஐ.தர்மசிங்
நாகர்கோவில்
https://www.facebook.com/profile.php?id=100086492050068
ReplyDeleteஎமது புதிய facebook page- pls.like and share
ReplyDelete