தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான சிறிலங்கா நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவருக்கு அனுப்பிய கடிதத்தில் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறைமையில் திருத்தங்களும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளையும் பெப்ரல் அமைப்பு எதிர்க்கவில்லை என அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், தேர்தல் நெருங்கியிருக்கும் இவ்வாறான சூழ்நிலையில் தேர்தல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ளும் தீர்மானங்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொள்ள கூடாது எனவும் எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதிக்குள் நாட்டில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் நடைபெற இருக்கும் தேர்தலை மேலும் ஒத்திவைப்பது அனுமதிக்க முடியாத ஒரு செயல் எனவும் கடந்த ஆண்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக தற்போது தேர்தெடுக்கப்படாத நபர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்..... தமிழ்நாடு செய்திகள் படிக்கவும்
மேலும்..... இலங்கை செய்திகள் படிக்கவும்
மேலும்..... இந்தியா செய்திகள் படிக்கவும்
மேலும்..... உலக செய்திகள் படிக்கவும்
மேலும்..... விளையாட்டு செய்திகள் படிக்கவும்