பொலீஸாருக்கன பலப் பரீட்சை

பொலீஸாருக்கன பலப் பரீட்சை


உத்தியோகத்திற்கு தேவையான மருத்துவ தரங்களை பூர்த்தி செய்யாத பொலிஸ் அதிகாரிகளின் சேவையை நீக்குவது தொடர்பில் பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தலைமையில் கடந்த வாரம் (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொது பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக இலங்கை நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

இதன்போது கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடும் போது , பொலிஸ் சேவையில் நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாத பல உத்தியோகத்தர்கள் இருப்பதாகவும், மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பித்ததை தொடர்ந்து சிறப்புக் கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் தெரிவித்தனர். 


இதில் சில உத்தியோகத்தர்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படவில்லை எனவும்,  இதனால் எப்பொழுதும் ஒழுங்காக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனால், நீண்டகாலமாக தரமான சுகாதார உடல் நிலையில் இல்லாத சுமார் 4000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார். 

( பேருவளை ஹில்மி )


 


Post a Comment

Previous Post Next Post