ஆபீசுக்கு வாடகை செலுத்தாத திலினி பிரியமாலி திகோ

ஆபீசுக்கு வாடகை செலுத்தாத திலினி பிரியமாலி திகோ

நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி திகோ குழுமத்தை நடத்தி சென்ற உலக வர்த்தக நிலையத்தின் 34வது மாடியின் உரிமையாளருக்கு வாடகை செலுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக பணத்தை அவர் செலுத்தவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கதிர்காமத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் பல தடவைகள் விஜயம் செய்துள்ள திலினி ஒரு தடவைக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திலினி பிரியமாலியின் நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மத்திய வங்கியின் வங்கியல்லாத நிதி நிறுவன மேற்பார்வை திணைக்களத்தின் கீழ் விசாரணைப் பிரிவொன்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பாரியளவிலான நிதிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய திலினி பிரியாமாலியிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அங்கு பல உண்மைகள் வெளியாகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், திகோ குழும ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், குற்றப் புலனாய்வு திணைக்களம் அங்கு நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இதேவேளை, திலினி பிரியமாலிக்கு எதிராக கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில், கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் என கூறப்படும் ஜானகி சிறிவர்தனவிடமும் வாக்குமூலங்களைப் பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

 


Post a Comment

Previous Post Next Post