இறுக்குப்பிடிப்போட்டு
குறுக்குத்தழுவுகிறது
பொய்கள்.
போலிகளைப்போல்
வலுவிழந்தவை
பொய்களென தெரியும்.
இருப்பினும்
அதை அரியணையயேற்ற
முயல்கின்றனர்
சிலகருப்பு அங்கிக்காரர்கள்.
தக்கசாட்சியம்
அகப்படும் தருணத்தில்
வாதங்கள் வலுப்பட
வெல்கின்றது உண்மை.
பொய்களில் புரளும்
மனிதராய் இல்லாமல்
உண்மை மட்டும் பேசிடும்
உன்னத மனிதராய் வாழுங்கள்.
-ஆக்கம்
பாரியன்பன் நாகராஜன்
குடியாத்தம்
Tags:
கவிதை