கண்ணீர் அருவி!

கண்ணீர் அருவி!


இப்போதெல்லாம்
கொழுத்திருக்கின்றதாம் உடம்பு
இருக்காதா பின்ன.

பூரிப்பிலும் இடை
பூரி போல் பொங்கிடுமாம்
நாறிப் போன
பணியில் இறங்கி விட்டால்
தேடிப் போடும்
ஔடதம் ஊறிப் போய்
ஊதிப் போன
பலூனாக உடலை மாற்றிடுமாம்

தொடரும் போது எதுவாயினும் 
பாணிப்பூரி போல் இனித்திடுமாம்
பாலாய்ப் போன காலம் கை விட்டால்
பல இடத்தினிலே  ஊரார்
மூக்கில் நாத்தம் அடித்திடுமாம்.

படுக்கப் பாய் இல்லாத வீட்டில் 
பகட்டு வாழ்க்கை பட்டு விரிக்குதாம்.
எடுத்த எடுப்பினிலே இழவு வீட்டிலும்
இரட்டை மாலை ஜொலிக்கிதாம்.

கடுகளவும் தங்கம் இல்லாதவள்
காதினிலே சுளகளவு தோடு மின்னுதாம்.
உழைத்துச் சேகரித்தவனுக்கு
இவை பெருமைதானம்மா
எடுத்துக் கொண்டோருக்கு
இது சிறுமையான செயலம்மா .

கடகடவென
நினைப்பதெல்லாம் நடக்குதாம்
தேக்கி வைத்த ஆசையெல்லாம்
படபடவென பறக்குதாம்.
தோண்டிய குழி நீரும்  உன் பெயர் 
சொல்லி தாகம் தீர்க்குதாம்.

மழை வெயில் பாராமல்
பசி பட்டினியோடு  நோய் தாங்கி
உழைத்துச்  சேகரித்த உனக்கென
கட கடவென பரிகாரமாய்  ஒவ்வொரு
யுகமும் புண்ணியம்  படி கட்டுதாம்
கேட்டறிந்ததுமே பெற்றவள்  
விழியினிலே ஆதங்கத்திலும் ஆனந்தத்திலும்
கண்ணீர் அருவி  கொட்டுதம்மா

கலா

மேலும்.....  கவிதைகள் படிக்கவும் 

 


Post a Comment

Previous Post Next Post