மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மட்டக்களப்பில் குரங்கு ஒன்றின் செயற்பாடு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த ஒருவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி, தனது நன்றியை குரங்கொன்று வெளிப்படுத்தியுள்ளது. 

தாளங்குடா பகுதியில் 56 வயதுடைய பீதாம்பரம் ராஜன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவரின் இறுதி சடங்கு நடைபெற்றது. இந்நிலையில் அங்கு வந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவருக்கு முத்தம் கொடுத்து தனது அஞ்சலியை செலுத்தியுள்ளது. 

குறித்த குரங்கிற்கு, உயிரிழந்தவர் தினமும் உணவு கொடுத்து வந்துள்ளார். இவ்வாறான நிலையில் இறுதி சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த குரங்கு அதனை அவதானித்துள்ளது. 

தனக்கு உணவளித்துவந்தவர் சடலமாக படுத்திருப்பதை பார்த்த குரங்கு அவரின் பக்கம் சென்று அவருக்கு சுவாசம் உள்ளதா என பரிசோதித்ததுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து அவரை எழுப்ப பல முயற்சிகளை செய்துள்ளது. எனினும் அவர் மரணித்திருப்பதை அறிந்த குரங்கு கண்ணீர் சிந்தியதுடன், அவரை முத்தமிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. 

இன்றைய உலகில் மனிதர்களே மனிதர்களை மதிக்காத நிலையில், ஐந்தறிவு கொண்ட குரங்கு இவ்வாறு செயற்படுவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post