
அமெரிக்காவில் குடியேறுவதற்கு கடும் சட்ட திட்டங்கள் உள்ள நிலையில் சில நாடுகளில் இருந்து அமெரிக்கா செல்வதே கடினமான ஒன்றாக இருக்கும் அளவிற்கு அமெரிக்கா சட்ட திட்டங்கள் இருக்கும். இதற்கான அமெரிக்க குடியுரிமை சட்டத்தை அந்நாட்டு அரசு 1952ல் நிறைவேற்றியது. இதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் அன்மையில், அமெரிக்காவின் சட்டப்படி கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சிகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியேற முடியாது. ஆனால் இதில் நிறைய விதி விலக்குகள் உள்ளன. உதாரணமாக நேபாளத்தில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் நினைத்தால் அமெரிக்காவில் குடியேற முடியும். அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு சென்று வர முடியும்.
இதற்கு தடை எதுவும் கிடையாது. கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் சிலருக்கு இதில் விலக்கு உள்ளது. தகுதி அடிப்படையில் கம்யூனிஸ்ட் மற்றும் சர்வாதிகார உறுப்பினராக இருந்தாலும் அமெரிக்காவில் குடியேற முடியும். முக்கியமாக இந்தியர்களுக்கு இந்த விதி பொருந்தாது. இந்தியாவில் சிபிஎம், சிபிஐ கட்சிகளில் இருந்தாலும் கூட அமெரிக்காவில் குடியேற முடியும் என்பதே அந்நாட்டின் சட்டதிட்டமாக உள்ளது. இந்த முழு விபரம் அறியாத பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சௌதா மணி தவறான செய்தியை பகிர்ந்தது இணையத்தில் வைரலாக வருகிறது. மேலும் நெட்டிசன்கள் பலர் அவரையும் அவரது பதிவை பகிர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினரை விமர்சித்தவர்களை விமர்சித்து வருகின்றனர்.
SOURCE;asianetnews



0 Comments